விஜய்யை நீதிபதிகள் விமர்சித்தது தேவையில்லாதது: முன்னாள் நீதிபதி சந்துரு அதிருப்தி

SHARE

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சொன்ன கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் பேசிய நீதிபதிகள், நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது.வரி என்பது நன்கொடையல்ல. அது நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு.


சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

நீதிபதியின் இந்தக் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள சூழலில் விஜய்க்கு கார்த்தி சிதம்பரம் எம்
பி., முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் வரி ஏய்ப்பு செய்வதற்கும், வரியை திட்டமிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. விஜய் வெளிநாட்டில் இருந்து காரை இறக்குமதி செய்துள்ளார். அவர் யாரையும் ஏமாற்றவில்லையே?.

வரியில் இருந்து விதிவிலக்கு கேட்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் உரிமை.

இந்தியாவில் பெரிய பெரிய பணக்காரர்கள் பலர் வரிவிலக்கு கேட்டிருக்கிறார்கள். கேட்டுக் கிடைத்தால் சந்தோஷப்படப்போகிறார்கள். இல்லையென்றால் கட்டப்போகிறார்கள்.

ஆனால், ரீல் ஹீரோ என்று உள்நோக்கம் கற்பிக்க என்ன நோக்கம் இருக்கிறது? என சந்துரு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விஷயத்தில் விஜய்யை விட்டு விட்டு அவருக்கு ஆலோசனை சொன்னவர்களை குறை சொல்லியிருக்கலாம். மேலும் இதில் சமூக நீதி எங்கிருந்து வந்தது? . வரி சட்டங்களைப் பொறுத்தவரை நீதிபதிகள் கண்டிப்பாக இருப்பது சரியானதுதான்.

ஆனால் அவரின் தனிப்பட்ட கேரக்டரை டேமேஜ் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், நான் நீதிபதியாக இருந்திருந்தால் இந்தமாதிரி தீர்ப்பை கொடுத்திருக்கமாட்டேன் என்றும் முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிக்கிய முன்னாள் அமைச்சர்.. வங்கிக் கணக்கு முடக்கப்படுமா?

Admin

இன்று முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!!

Admin

வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்ட சிவசங்கர் பாபா? ஸ்கெட்ச் போட்ட சிபிசிஐடி!

Admin

பேரிடர் ஆபத்தா? இந்த வாட்ஸப் எண்ணில் சொல்லுங்க… தமிழக அரசு அறிவிப்பு

Admin

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை… அமைச்சர் பொன்முடி விளக்கம்

Admin

வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் கவிழ்ந்து விபத்து

Admin

இனி அசைவ உணவகங்களிலும் அரசுப் பேருந்தை நிறுத்தலாம்! – உத்தரவைத் திருத்தியது தமிழக அரசு!.

தலிபான்கள் ஆதிக்கம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையும்: காா்த்திக் சிதம்பரம் எம்.பி.

Admin

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

வாழும் பென்னிகுவிக் – யார் இந்த ககன் தீப் சிங் பேடி?

நீட் விவகாரம் : இதெல்லாம் அயோக்கியத்தனம்.. ஆ.ராசாவின் பழைய வீடியோவை காட்டி எடப்பாடி குற்றச்சாட்டு!

Admin

Leave a Comment