கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி, சசிகலாவை விசாரிக்க கோரிய மனு மீது இன்று பிற்பகலில் விசாரணை நடைபெற உள்ளது.
ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய இந்த வழக்கு திமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளாமல் இருக்கும் நிலையில், இருவரையும் விசாரிக்க கோரிய மனு இன்று விசாரணைக்கு வருவது கவனிக்கத்தக்கது.
ஆதாரங்களும், முகாந்திரங்களும் வலுவாக இருக்கும் நிலையில், இருவரையும் விசாரிக்க உத்தரவு இன்று பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்