பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எடியூரப்பாவிடம் உதவி கேட்க சென்றபோது பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த்தாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எடியூரப்பா என்ன சொல்கிறார்?
இதுகுறித்து பேசிய எடியூரப்பா, “யாரோ ஒரு பெண் என் மீது வழக்குத் தொடர்ந்துள்ளதாக அறிந்தேன். யார் என்று விசாரித்தபோது தெரிந்தது. அவர்கள் முன்பு ஒருமூறை என்னை சந்திக்க வந்தபோது நான் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. பின் ஒரு முறை அவர்கள் அழுவதாக என்னிடம் சொன்னார்கள், அப்போது அவர்களை அழைத்து பேசிய நான் காவல் ஆணையர் தயானந்தாவுக்கு அழைத்து ஆக வேண்டிய உதவிகளைச் செய்யக் கோரினேன். அதன் பின்னர் அவர்கள் இங்கும் அங்கும் என்னைக் குறித்து தவறாக பேசி வருவதாகவும் அறிந்தேன். ஆனால், இப்போது இப்படிபுகாரளித்துள்ளானர். இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் சதி என்னவென்று தெரியவில்லை. உதவி செய்ததற்கு இப்படி ஒரு எதிர்வினை வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.