பிக்பாஸ் நாட்கள்… நாள் 4: திருநங்கையின் வாழ்க்கை வலி!.

SHARE

’காத்து வாக்குல ரெண்டு காதல்…’ படத்துல இருந்து ‘டூட்டூ டூட்டூ…’ பாடல் ஒலிக்க… தூக்கம் கலையாமல் அரை போதையில் ஆடினாங்க ஹவுஸ்மேட்ஸ் எல்லாம்… 

குழந்தைகளுக்கு எல்லாம் போடுவாங்கள்ல உச்சிக் குடுமி, அப்டி ஒரு குடுமி போட்டு, சின்னபொண்ணுக்கிட்ட ஆசீர்வாதம் வாங்கி விபூதியும் வச்சுக்கிட்டு போனாரு அபிஷேக். இவன் நல்லவனா, கெட்டவனா மொமண்ட்!

டைனிங் டேபிள்ல பாவ்னிய பார்த்து, ’நம்ம ஃபீலிங்ஸ… அது கஷ்டமா இருந்தாலும் சரி சோகமா இருந்தாலும் சரி… ஒரு ஆள்கிட்ட சொல்லலாம்னா அது பாவ்னி தான்’ அப்டின்ன அபிஷேக், உடனே கேமராவ பாத்து ’டேய் பசங்களா இந்த பொண்னுக்கு 31 வயசாகுது டா…. ஓடிடுங்கடா’ன்னு சொல்ல, ஏன்னு பாவ்னி கேக்க, ’பின்ன… உன்ன சின்ன பொண்ணுன்னு நினைச்சு ஸ்கூல் பசங்கல்லாம் வந்து லவ் லெட்டர் நீட்டப்போறாங்க…’ன்னு சொல்ல, ஆல் ஏஜ் குரூப்ஸ் ஆர் அக்சப்டட்னு சிரிச்சிக்கிட்டே போயிட்டாங்க பாவ்னி…

அடுத்து ’கத சொல்லட்டுமா…’ டாஸ்க்குக்கு வந்தவர் நமீதா. ’திருநங்கைகள்லாம் இந்த பிக் பாஸ்க்கு எதுக்கு?’ – அப்டின்னு கேக்குறவங்களுக்கு இந்த எபிசோடுல பதில் கிடைச்சிருக்கும். தன் வாழ்க்கையில ஏற்பட்ட கஷ்டங்களை கண்ணீருடன் சொன்னார் நமீதா. 

நீ ஒரு பையன் பிறந்து வளர ஆரம்பிக்கும் போது, திடீர்ன்னு தன்னோட உடம்புலயும் மனசுலயும் பாலின மாற்றங்கள் ஏற்படுறப்ப, அது அவங்களுக்கே முதல்ல சரியா புரியாது. அப்ப சுத்தி இருக்குற சூழ்நிலையும் அவங்களுக்கு எதிரா மாறி ’நீ தப்பு, நீ இப்டி மாறுறது தப்பு…’ன்னு, அவங்க நினைச்சாலும் தடுக்க முடியாத அந்த இயற்கை மாற்றத்த அசிங்கப்படுத்துறதும், அவர்களை அவர்களே வெறுக்கும் நிலைக்கு தள்ளுறதும் மிகப்பெரிய கொடூரம். 

அப்படி தன்னோட வாழ்க்கையில, தன் குடும்பம் தனக்கு ஏற்படுத்தின வலிகள தன் ஹவுஸ்மேட்ஸ் உடன் பகிர்ந்து கொண்டார் நமீதா. 

8 வயதில் நமீதாவுக்கு ஏற்பட்ட உடல் மாற்றம், மன மாற்றம்… பெற்றவர்களிடம் சொல்லலாமா வேண்டாமா என்று பயப்பட்டது, அதை சொல்லியதால் தன் பெற்றோரே தன்னை பைத்தியம் என்று நினைத்து ஆஸ்பத்திரியில் சேர்த்த கொடுமை. ஆணாகப் பிறந்த அவர் இயற்கை மாற்றத்தால் பெண்ணாய் மாறியதால், சமூகத்தின் வெறியால் மீண்டும் அவரை ஆணாய் மாற்ற 6 மாதம் நடந்த சிகிச்சையின் கொடுமை எல்லாவற்றையும் கூறினார். 

இந்த கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறிய நமீதா, தன்னை போன்றவர்களை சந்தித்தால் ஆறுதலாக இருக்கும் என்று பாம்பே செல்ல, அங்கே தன்னைப் போன்ற சிறுவர்களை பாலியலுக்கும், பிச்சை எடுக்கவும் பயன்படுத்துவதைப் பார்த்து பயம் வர… எங்கு செல்வதென்று தெரியாமல் பட்ட கஷ்டங்களையும் கூறினார். இவ்வளவு கஷ்டத்துலயும் டிகிரி முடித்து தற்செயலாக கிடைத்த மாடல் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் விடுதலை அடைந்ததாகவும் கூறினார். 

டிரான்ஸ் ஜெண்டர் மிஸ் சென்னை, மிஸ் தமிழ்நாடு, மிஸ் இந்தியா, மிஸ் இண்டர்நேஷனல் ஸ்டார் போட்டிகளில் வெற்றி அடைந்ததால் தன் குடும்பத்தார் தன்னை ஏற்றுக் கொண்டதும் வாழ்க்கை மாறியது குறித்தும் கண்ணீருடன் சொன்னார். 

’எனக்கு சமூகத்துக்கிட்ட கேக்க நிறைய கேள்விகள்  இருக்கு, என்ன மாதிரி இருக்குறவங்களால இந்த சமூகத்துக்கு எந்த வித கெடுதலும் நடக்கல, நாங்க எங்களுக்கு ஒரு வாழ்க்கைய அமைச்சு மத்தவங்களுக்கு உதவியா இல்லனாலும் உபத்தரவம் இல்லாம இருக்குறோம், அப்புறம் ஏன் எங்கள அடிச்சு, பாலியல் ரீதியா, கொன்னுடணும்ற அளவுக்கு ஏன் வெறுக்குறீங்க… இந்த மாதிரி நிறைய கேள்விகள் இருக்கு’னு கண்ணீருடன் கூறி முடித்தார் நமீதா. 

கடைசியாக அவர் வைத்த வேண்டுகோள், என்னை மாதிரி இருக்குறவங்கள வெறுத்து ஒதுக்காம அவங்க தன்ன காப்பாத்திக்க படிப்ப மட்டும் குடுங்க போதும், அவங்களாலயும் இந்த சமூகத்துல சாதித்து காட்ட முடியும்னு கேட்டுக்கொண்டார். நமீதாவின் இந்த கதைக்கு எல்லா ஹவுஸ்மேட்ஸும் ஹார்ட் இமோஜி கொடுத்தார்கள். 

அப்புறம் பெட்ல மேக்கப் போட்டுகிட்டு இருந்த பிரியங்காவிடம் பேச வந்தார் தாமரை. பிரியங்காவின்  மேக்கப் டப்பாவை எல்லாம் பார்த்து, 100 நாளைக்கும் சேர்த்து மேக்கப் டப்பாலா கொண்டுவந்துடீங்களா, இதுலா போடலாமா தெரிஞ்சிருந்தா நானும் என்னோட மேக்கப் ஐடம்லா கொண்டு வந்திருப்பனு சொல்ல அதற்கு பிரியங்கா யார் வேணாலும் மேக்கப் போடலாம், கமல் எபிசோடில எல்லாரும் மேக்கப் போட்டுதான் இருப்பாங்கன்னு சொல்ல அப்ப நானும் என் கூத்து ட்ரெஸ்லா கொண்டு வர சொல்றேன்னு கிளம்பிட்டாங்க தாமரை.  

அடுத்து கத சொல்லட்டுமா டாஸ்க்கு வந்தார் மதுமிதா. பேஷன் டிசைனிங் படித்து, அதற்கேற்ற வேலை அமையாததால் ஐடி துறைக்கு வந்தது, காதலால் ஏற்பட்ட மன அழுத்தம், மன அழுத்தத்தால் ஏற்பட்ட தற்கொலை உணர்வு, அப்புறம் நம்மல பத்தியே யோசிக்குறோமே, நம்மல இந்த அளவுக்கு கொண்டு வந்த நம்ம பெத்தவங்களையும் கூட பிறந்தவர்களையும் பார்க்கணுமே-ன்னு தன்னை தேற்றி, தற்போது வாழ்க்கையின் நடைமுறைகளை புரிந்து கடந்து வருவதாக கொஞ்சும் தமிழில் சொல்லி முடித்தார்.  ’என் வாழ்க்கையில் நடந்த  மாதிரி இருக்கே…’ன்னு பாவ்னி, மதுமிதாவிடம் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இப்படி படு சீரியஸ்சாக முடிந்தது நேற்றைய தினம்.

-சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

டிரெண்டிங்கில் ‘வெல்கம் தோனி’!

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 2: 32 வகை கை முத்திரைகள்.

நம்ம தல தோனியா இது.. வித்தியாசமான தோற்றத்தில் கலக்கும் தோனி… வைரலாகும் புரோமோ!

Admin

தான் காதலித்த இரு பெண்களையும் ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞர்.. சோகத்தில் 90 s kids !

Admin

மேட்சா முக்கியம்… கிரிக்கெட் மைதானத்தில் காதல் சொன்ன சி.எஸ்.கே. வீரர்!.

லடாக் பாரம்பரிய உடையில் மனைவியுடன் அமீர் கான் நடனம்.. வைரல் வீடியோ

Admin

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 3: வேலு தாத்தா

Admin

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

ஜெய்பீம் காலண்டர் காட்சி சர்ச்சை – நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

ஜிப்ஸிக்கள் மகிழ்ச்சியாக இல்லை – மகசூல் -பயணத்தொடர் – பகுதி 11

Pamban Mu Prasanth

Leave a Comment