இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கொழும்பில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 50 ரன்களும் விளாச 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது.
இலங்கை அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா மற்றும் சமீரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் அசலங்கா 44 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர். இதனால் 18.3 ஓவர்களில் இலங்கை அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன் மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.