அழகிப்போட்டி மேடையில் மியான்மருக்கு உதவி கேட்ட அழகி: துணிச்சலை வியந்த அரங்கம்!.

SHARE

உலக அளவிலான அழகிப் போட்டி ஒன்றில் மியான்மர் நாட்டு அழகி அந்நாட்டில் நடந்துவரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக பேசியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

‘மிஸ் கிராண்ட் இண்டர்நேஷனல்’ என்ற சர்வதேச அழகிப்போட்டி கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் ஏற்கனவே பல்வேறு நாடுகளிலும் வெற்றி பெற்றவர்களின் இறுதிச் சுற்று தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகின்றது.

இதில் மியான்மர் நாட்டின் சார்பில் கலந்து கொண்ட 22 வயது கல்லூரி மாணவி ஹான் லே என்பவர் நிகழ்வின் மேடையில் ஆற்றிய உரை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. அந்த உரையில் அவர், மியான்மன்ர் நாட்டில் இராணுவம் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து மக்களைக் கொன்று குவித்துவருவதாகவும், மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் வீதிக்கு வந்து போராடி வருவதாகவும் கூறினார். அத்தோடு சர்வதேச அளவில் உதவிகள் தேவைப்படும் நிலையில் மியான்மர் உள்ளதால் அனைவரும் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஹான் லேவின் இந்த துணிச்சலான பேச்சுக்கு நிகழ்ச்சியின் தலைவர் உட்பட அரங்கத்தில் இருந்த பலரும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக கைத்தட்டினர். இந்த ஹான் லே கடந்த மாதம் இராணுவ ஆட்சிக்கு எதிராகத் தெரிவில் இறங்கிப் போராடியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்த கூகுள்… 22 கோடி யூரோ அபராதம் விதித்த பிரபல நாடு

Admin

இடது கையின் பின்னே இவ்வளவு இருக்கா? – சர்வதேச இடது கை நபர்கள் தின சிறப்புக் கட்டுரை!.

தடுப்பூசி போடலைனா சிம் கார்டு இணைப்பு “கட்” …. அரசின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி

Admin

ஒலிம்பிக் போட்டியிலிருந்து ஃபெடரர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி

Admin

காபூல் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து வெடிகுண்டுத்தாக்குதல் !

Admin

உங்க உதவிய அமெரிக்கா மறக்காது.. : ஆண்டனி பிளிங்கன்

Admin

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

Admin

வீணான இஷான் கிஷனின் சாதனை. வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்…

ரத்த ஆறு ஓடுவதைத் தடுக்கவே நாட்டைவிட்டு வெளியேறி உள்ளேன்.. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி

Admin

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Admin

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

Leave a Comment