சிஎஸ்கே அணியால் இந்திய அணியில் தோனி இணைவதில் சிக்கல் – ரசிகர்கள் ஏமாற்றம்…

SHARE

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக இந்தாண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டபடி இந்தியா சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

இதற்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில்
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் , இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த தொடரின் போது அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் உறுப்பினரான சஞ்சீவ் குப்தா பிசிசிஐ-க்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவதை நிறுத்த வேண்டும். அந்த முடிவை கைவிட வேண்டும். ஏனென்றால் தோனி ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். எனவே உத்தரவை ரத்து செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.

மேலும் பிசிசிஐயின் விதிமுறைகளில் 38 (4)-ன் படி ஒருவர் ஒரே நேரத்தில் 2 பதவிகளை வகிக்கக்கூடாது. தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும், இந்திய அணி ஆலோசகராகவும் செயல்பட முடியாது. எனவே பிசிசிஐ-ன் அபெக்ஸ் கவுன்சில் இதனை விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என சஞ்சீவ் குப்தா குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் சஞ்சீவ் குப்தா கடந்த காலங்களில் இதுபோன்ற பல புகார்களை வீரர்களுக்கு எதிராக அளித்துள்ளதால் இதனை பிசிசிஐ அபெக்ஸ் கவுன்சிலின் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: தோனி வழக்கு தள்ளிவைப்பு

Admin

டெல்லி கேப்பிடல்ஸ்சை சிதறடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

சே.கஸ்தூரிபாய்

ஜடேஜாவை அணியில் சேர்த்தது மிகப்பெரிய தவறு – சஞ்சய் மஞ்சரேக்கர் விளாசல்

Admin

ஆண்டுக்கு 28 லட்சம் சம்பளம் வாங்கியவர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை! – காரணம் என்ன?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டத்திற்கு 4,000 ரசிகர்களுக்கு அனுமதி

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு : மு.க.ஸ்டாலின்!

Admin

அழகிப்போட்டி மேடையில் மியான்மருக்கு உதவி கேட்ட அழகி: துணிச்சலை வியந்த அரங்கம்!.

யூரோ கோப்பை கால்பந்து : இத்தாலி அணி சாம்பியன்

Admin

Leave a Comment