கண்ணீருடன் விடைபெற்ற லியோனல் மெஸ்சி – வைரலாகும் வீடியோ!

SHARE

21 ஆண்டுகள் கால்பந்து உலகில்பார்சிலோனா அணிக்காக விளையாடிய நட்சத்திர வீரர் மெஸ்சி, அந்த அணியில் இருந்து விலகுவதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது

அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி 13 வயது சிறுவனாக பார்சிலோனா அணியில் சேர்ந்தார். 778 ஆட்டங்களில் அந்த அணிக்காக 682 கோல்கள் அடித்துள்ளார்.

தனிப்பட்ட கிளப் அணிக்காக பீலே அடித்த 643 கோல் என்ற சாதனையை முறியடித்து மெஸ்சி புதிய சாதனை படைத்தார். அந்த அணிக்காக 34 வெற்றி கோப்பைகளையும் பெற்றுத் தந்துள்ளார்.

பார்சிலோனாவுக்காக அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்சி, கால்பந்து வரலாற்றில் அதிக ஊதியம் பெறும் வீரராக வலம் வந்தார். மெஸ்சிக்கு வழங்கப்படும் சம்பளம் கடும் நிதி நெருக்கடியை ஏற்பட்டதால் பார்சிலோனா அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் மெஸ்சி.

வாழ்நாளில் பெரும்பகுதி பார்சிலோனாவிற்காக விளையாடிய நிலையில் அணி நிர்வாகத்தின் இந்த முடிவை தான் எதிர்பார்க்கவில்லை என நிருபர்கள் கூட்டத்தில் மெஸ்சி கண்ணீருடன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசிய போது, என் வாழ்நாளில் இப்படி ஒரு நாள் வரும் என நினைக்கவே இல்லை. இந்த 21 ஆண்டு பயணம் முடிவடைவது குறித்து எனக்கு என்ன சொல்வது என்றே வார்த்தைகள் வரவில்லை. கிளப்புக்குள் இணைந்த முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை என்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறேன்.

ஆனால் அணிக்கு குட் பை சொல்வேன் என்று நினைத்துப்பார்ககவே இல்லை. கூடியிருந்த சக வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் முன்னாள் வீரர்கள் நீண்ட நேரம் கரகோஷம் எழுப்பி மெஸ்சிக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

தற்போது இணையதளங்களில் மெஸ்சி கண்ணீருடன் விடைபெற்ற வீடியோ வைரலாகி வருகிறது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அப்போது மல்யுத்த வீரன் ..இன்னைக்கு ஈட்டி எறிதலில் தங்க மகன்.. யார் இந்த சுமித் அண்டில்?

Admin

ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Admin

வெற்றி பெற்றது டெல்லி அணி… பட்டியலில் இரண்டாம் இடம்.

ஐபிஎல் தொடருக்காக 5வது டெஸ்ட் போட்டி ரத்து ? – சர்ச்சையில் சிக்கிய இந்திய அணி

Admin

சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

இந்திய அணியை வழிநடத்த அவரே சிறந்தவர் : தோனியை புகழ்ந்த பிசிசிஐ

Admin

நான் யார் தெரியுமா.. ஏன் காரையே நிறுத்துவியா… போலீசாரிடம் நடுரோட்டில் சண்டை போட்ட பெண்.. வைரல் வீடியோ

Admin

புதிய தோற்றத்தில் தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Admin

இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

Admin

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி

Admin

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment