ஹாட்ரிக் வெற்றியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!.

SHARE

ஐபிஎல் லீக்கின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழத்தி வெற்றி பெற்றது. 

வான்கடே, மும்பை

கொல்கத்தா அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இரண்டு அணிகளும் சில மாற்றங்களோடு களம் இறங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ப்ராவோக்கு மாற்றாக எங்கிடியை கொண்டு வந்தனர். அதேபோல் கொல்காத்தா அணியில் ஹர்பஜனுக்கு மாற்றாக நாகர்கோட்டியையும், சகிப் ஹல் ஹசனுக்கு மாற்றாக சுனில் நரைனையும் கொண்டு வந்தார்கள். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்க்வாட் மற்றும் டுப்ளஸி வந்தனர். கெய்க்வாட் முந்தைய ஆட்டங்களில் சரியாக விளையாடாததால் இந்த மேட்ச்சில் இவரையும் மாற்றி இருப்பார்கள் என எதிர்ப்பார்க்கபட்டது. ஆனால் நம்பிக்கை வைத்து கெய்க்வாட்டை ஆட வைத்தார் தோனி. அதற்கு பலனும் கிடைத்தது. 

ருதுராஜ் கெய்க்வாட்

ரொம்ப முக்கியமான பகுதி பவர்பிளே ஓவர்களில் கெய்க்வாட் நன்றாக விளையாடி பவுண்டரி, சிக்ஸர் என்று பந்துகளைத் தெறிக்க விட்டார். அவர் ஆடுவதை பார்த்து டுப்ளஸி ஸ்ட்ரைக்கை அவருக்கே கொடுத்து ஊக்கப்படுத்தினார். பவர்பிளே முடிவில் 54 ரன்கள் எடுத்தது சென்னை அணி. 

இந்த ஐபிஎல் தொடரில் பவர்பிளே ஓவரில் 50 தாண்டியது இதுவே முதல் முறை. அதே போல் இந்த ஐபிஎல் தொடரில். இந்த ஆட்டத்தில் தான், தன் முதல் அரை சதத்தையும் எடுத்தார் கெய்க்வாட். ஆட்டத்தின் 11 வது ஓவரில் தன்னுடைய அரை சதத்தை எடுத்தார் கெய்க்வாட். பிறகு 42 பந்துகளுக்கு 64 ரன்கள் எடுத்த நிலையில், வருணின் பந்து வீச்சில் பவுண்டரி அடிக்க முயன்று கேட்ச் ஆகி அவுட்டானார். 

டுப்ளஸி

ஒன் மேன் ஷோ என்று தான் கூற வேண்டும். சூப்பரான ஆட்டம், தொடக்க ஆட்டக்காரராக வந்தவர்,  கடைசி ஓவர் வரை நின்று ஆடி 95 ரன்கள் எடுத்து நாட் அவுட்டில் இருந்தார். நிதானமாக ஆடினாலும் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என வானவேடிக்கை காட்டவும் தவறவில்லை. ருதுராஜ், மொயின் அலி, ஆகியோருடனான ஃபார்ட்னர்ஷிப் நன்றாக அமைந்தது டுப்ளஸிக்கு.  

தோனி 

தோனி எப்போதுமே 6 அல்லது 7 வது ஆட்ட வீரராக தான் களம் இறங்குவார் ஆனால் நேற்று, 4 வது வீரராக, மொயின் அலி யின் விக்கெட்டிற்கு பிறகு ஸ்வீட் சர்ப்பரைஸாக வந்தார். வந்தவுடனேயே சிங்கிள், நோ பால், ஃப்ரீ ஹிட்டில் 1 பவுண்டரி, மிட் விக்கெட்டில் 1 சிக்ஸர், என 17 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

ஆட்டத்தின் கடைசி பந்தில், ஜடேஜாவின் சிக்ஸ்ஸில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 220 ரன்கள் எடுத்தது. 

221 ரன்கள் என்ற இலக்கை கொல்கத்தாவால் சமாளிக்க முடியாது என்று தான் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் எண்ணினர். அவ்வளவு ஏன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் அப்படித்தான் எண்ணி இருப்பார்கள். ஆனால் இது கிரிக்கெட்டாச்சே, இதில் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஆட்டத்தை மாற்ற முடியும் என்பதுதான் நேற்றும் நடந்தது. 

தீபக் சஹர்

சென்னை  சூப்பர் கிங்ஸ்ஸின் வெற்றிக்கு மறுபடியும் கை மேல விக்கெட் கொடுத்து பவர்பிளே ஓவரோட ராஜா ஆனார் தீபக் சஹர். முக்கியமான தலைகளை எல்லாம் பவர்பிளே ஓவரிலேயே வெளியே அனுப்பினார்.  

முதல் ஓவரிலேயே தீபக் சஹரின் பந்து வீச்சில் டக் அவுட் ஆகினார் கில்.  இது தீபக்கின் முதல் விக்கெட். அவரின் 2வது ஓவரில் பந்தை பவுண்டரிக்காக தூக்கி, கேட்சுக்கு சென்று அவுட்டானார் ராணா இது அவருடைய இரண்டாவது விக்கெட். தீபக்கின் மூன்றாவது ஓவரில் மோர்கன் மற்றும் நரைனின் விக்கெட்டை எடுத்து, ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் என மொத்தம் 4 விக்கெட் எடுத்து பட்டையைக் கிளப்பினார் சஹர்.  

பவர்பிளேவின் கடைசி ஓவரில் எங்கிடி, த்ரிப்பாட்டியின் விக்கெட்டை எடுக்க, கடைசி 6 ஓவர்களில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அப்போது இன்னும் சில 5 ஓவர்களில் மேட்ச் முடிந்துவிடும் என்று தான் சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்தனர். முடியவே முடியாது 20 ஓவரும் நீங்க பார்த்தே ஆகணும் என்று  ஸ்டேடியத்தையே அதிர வைக்க வந்தார் ரஸல்.  

ரஸல்

கொல்கத்தா அணியின் கேம்சேஞ்சர் என்றுதான் இவரைக் கூற வேண்டும். ஆட்டத்தின் 6 வது ஓவரில் வந்தவர், பவுண்டரி, சிக்ஸர் என பந்தை துவம்சம் செய்தார். தினேஷ் கார்த்திக் மற்றும் ரஸலின் ஃபார்ட்னர்ஷிப்பில் 10 வது ஓவரிலேயே 26 பந்துகளுக்கு 60 ரன்கள் கிடைத்தது. அவ்வளவு ஏன், 21 பந்தில் தன்னுடைய அரை சதத்தையே அடித்துவிட்டார் ரஸல்.  அப்பர் கட், ஃபர்ஸ்ட் ஸ்லிப் என கிடைத்த கேப்பில் எல்லாம் பந்துகளை பறக்க விட்டார். இவர் அடிப்பதை பார்த்து சென்னை அணியும், ரசிகர்களும் ஆடியே போய்விட்டார்கள்.  இவரின் விக்கெட்டை வீழ்த்தவே தீபக்கும், ஜடேஜாவும் முயற்சி செய்தனர். ஆனால் கடைசியில், சாம் கர்ரனின் பந்துக்கு வைடு என்று நினைத்து ஒதுங்கி நின்ற ரஸல், பந்து லெக் ஸ்டெம்பில் பட்டு அவுட் ஆனார். ’எப்படி அவுட்டானேன்?, நான் ஏன் ஒதுங்கி நின்றேன்?’ என்ற யோசனையிலேயே வெளியேறினார் ரஸல். சென்னை அணிக்கு இந்த விக்கெட் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.  கொல்கத்தா அணிக்கு 22 பந்துகளில் 54 ரன்கள் கொடுத்து கெத்து காட்டியவர் சிறிய தவறால் வெளியேறினார். 

கம்மின்ஸ்  

இவர் கொல்கத்தா அணியின் அடுத்த கேம்சேஞ்சர். தாக்கூர் பந்தில் தொடர் பவுண்டரிகள், டீப் விக்கெட் திசையில் சிக்ஸர் என விளாசினார் கம்மின்ஸ். சாம் கர்ரனின் பந்தில் சிக்ஸர், சிக்ஸர் என ஹாட்ரிக் அடித்து,  அப்புறம் 1 பவுண்டரி மீண்டும் 1 சிக்ஸர் என பின்னி எடுத்தார் கம்மின்ஸ். 6 சிக்ஸர் 4 பவுண்டரின்னு ரஸலையே மிஞ்சி விட்டார் கம்மின்ஸ். 23 பந்தில் அரை சதம் எடுத்து அசத்தினார் கம்மின்ஸ். 19 வது ஓவரில் கம்மின்ஸ் ஸ்டரைக்கில் இருந்தால் தான் வேலைக்கு ஆகும் என்று எண்ணி, வருண் ரன் அவுட்டாகினார். இதிலேயே கொல்கத்தா 9 விக்கெட்டுகளை விட்டுவிட்டது. அடுத்து கிருஷ்ணா வந்தார். அவரும் கம்மின்ஸ் அடித்த பந்தில் ரன் அவுட்டானார். கடைசியில் கொல்கத்தாவால் 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால் முதல் 5 ஓவரிலேயே 5 விக்கெட்டுகள் இழந்த கொல்கத்தா, 20 ஓவர் வரை தாக்குப்பிடித்து, அதுவும் இடி மழை போல் ரன்களை அடித்து தள்ளியது பாராட்டுக்குரியது. 

தோனி பேட்டி

ஆட்டம் முடிந்தது தோனியிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் முதல் கேள்வியாக இருந்தது, ’எப்படி இந்த மாதிரியான சூழ்நிலையிலும் அமைதியாக, எந்தவித மனநிலையையும் வெளிப்படுத்தாமல் இருக்க முடிகிறது?’ என்பது தான். அதற்கு தோனியின் பதில், இந்த மாதிரியான ஆட்டங்களில் எல்லாம் போட்டி என்பது ஃபார்ஸ்ட் பவுலருக்கும் பேட்ஸ்மேனுக்கும் தான். இதில் என்னுடைய வேலை ஃபீல்டிங்கை செட் செய்து மேட்சை வேடிக்கை பார்ப்பது தான் என்று கூறினார். 220 ரன்கள் அடித்ததும் ஆட்டம் நம்ம கையில தான் இருக்கு, நாம தான் ஜெயித்தோம் என்று நினைத்தீர்களா என்று கேட்டதற்கு. தோனி சொன்னது, நான் நிறைய கிரிக்கெட்டை பார்த்தவன், அதனால் நம்மால் எடுக்க முடிந்த ரன்னை ஏன் எதிரணியால் எடுக்க முடியாது என்று யோசித்தேன். எதிரணியால் முடியாது என்று நினைக்கவே கூடாது. அவர்களாலும் அடிக்க முடியும். நாம செய்ய வேண்டியது நாம எப்படி ஃபீல்டிங் பண்ணனும், பவுலிங்கில் அக்கறை காட்டுவது என்பது மட்டும்தான் – என்றார். ரஸலோட ஆட்டத்தில் பயந்து விட்டீர்களா என்று கேட்டதற்கு, 200 ரன்களை எடுப்பதற்கு எப்படியும் அவர்கள் இப்படிதான் ஆடுவார்கள் என்று  தெரியும், நாங்க கவனித்தது ஜடேஜா, சாம் கர்ரனின் பந்து வீச்சை தான். அதில்தான் கவனம் செலுத்தினோம் என்று கூறினார். ரஸலோட விக்கெட்டை ப்ளான் பண்ணி தான் எடுத்தீர்களா என்று கேட்டதற்கு, சாமுக்கு என்ன தோணுதோ அப்படிதான் அந்த பந்தை போட்டார், ஆனால் அது விக்கெட்டாக மாறியது என்று கூறினார்.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடையா?

ஒலிம்பிக் போட்டியிலிருந்து ஃபெடரர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி

Admin

வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிம புதுப்பித்தலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

Admin

இரண்டாவது அலையில் செய்த தவறினை 3- வது அலையில் செய்யமாட்டீங்க என நினைக்கிறேன்.. ராகுல் காந்தி

Admin

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

அப்போது மல்யுத்த வீரன் ..இன்னைக்கு ஈட்டி எறிதலில் தங்க மகன்.. யார் இந்த சுமித் அண்டில்?

Admin

மழையால் ரத்தான டிஎன்பிஎல் முதல் ஆட்டம்: ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

Admin

கொரோனா 3ம் அலை வருமா என தெரியாது :எய்ம்ஸ் தகவல்!

Admin

போட்டியின் போது மழை அதிகமானதால் டேக் ஆஃபில் சிரமப்பட்டேன்: மாரியப்பன் தங்கவேலு

Admin

‘நீட்’ தேர்வில் ஆர்வம் காட்டாத அரசு பள்ளி மாணவர்கள் – அதிர்ச்சி தகவல்

Admin

திமுக ஆட்சி எம்.ஜி.ஆருக்கு அவமானம் – ஜெயலலிதா குறித்தும் பேசி கொதிக்கும் மோடி

Pamban Mu Prasanth

தற்கொலைக்கு முயன்ற நபர்… காப்பாற்றிய பேஸ்புக்…

Admin

Leave a Comment