முதல் ஐ.பி.எல். போட்டி: வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

SHARE

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

சென்னை:

2021ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் நேற்று தொடங்கின. தொடரின் முதலாவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் மும்பை இண்டியன்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

ஹர்ஷல் படேல் எடுத்த 5 விக்கெட்களும், டிவில்லியர்ஸின்  வழக்கமான அதிரடி ஆட்டமும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தன. 4 ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே கொடுத்து இஷான் கிஷன், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குருனல் பாண்டியா, ஜான்சென் ஆகிய 5 பேரின் விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் ஆனார் படேல். டிவில்லியர்ஸ் 27 பந்துகளில் 48 ரன் எடுத்து RCB யோட இக்கட்டான சூழ்நிலையை சரி செய்தார். 

பீல்டிங்கில் மூன்று கேட்ச்களை தவற விட்டது, சுந்தரை தொடக்க வீரராக்க களம் இறக்கியது, பட்டிதாரை மூன்றாவது வீரராக களமிறக்கியது என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பல வகைகளிலும் சறுக்கினாலும், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸின் ஆட்டத்தால்  அது வெற்றியை எட்டியுள்ளது. ஒரு வகையில் சுலபமாக வெல்ல வேண்டிய ஒரு ஆட்டத்தை தாங்களே கடினமாக மாற்றி, போராடி வென்றனர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினர் என்றும் இதனைச் சொல்லலாம்.

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

4ஆவது முறையாக கோப்பை… சாதித்த சென்னை சூப்பர் கிங்ஸ்…

இரா.மன்னர் மன்னன்

மகாராஷ்ட்ராவில் தொடங்கியது கொரோனா 3வது அலை… அரசின் அறிவிப்பால் மக்கள் பீதி

Admin

ஐபிஎல்-லில் தனது முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே. வெற்றியைத் தவறவிட்டது!

சே.கஸ்தூரிபாய்

பிரதமரை ஈர்த்த வீடியோ… இணையத்தில் வைரல்

Admin

மேதைகளின் மேதை அம்பேத்கர்! – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா… பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் எழுப்பும் கேள்விகள்

Admin

வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

Admin

இந்திய அணியை வழிநடத்த அவரே சிறந்தவர் : தோனியை புகழ்ந்த பிசிசிஐ

Admin

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் தூக்கி வந்த மருமகள்!.

பவானிபூர் தொகுதியில் போட்டியிடுறார் மம்தா பானர்ஜி!.

Leave a Comment