4ஆவது முறையாக கோப்பை… சாதித்த சென்னை சூப்பர் கிங்ஸ்…

SHARE

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, 4ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. 

நேற்று நடந்த இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த இறுதிப் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயிச்சுடும்னு நம்பின ரசிகர்களுக்கு தோனியோட பரிசு இந்த ஐபிஎல் கோப்பை. 

டாஸ் வென்ற கொல்கத்தா அணியினர் பவுலிங்கை தேர்வு செய்தனர்.  தோனி டாஸ் வெல்லாததே சென்னை ரசிகர்களுக்கு பகீர் என்று இருந்தது. ஆனா ’அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமா தாண்டா இருக்கு…’ என்பது போல் கொல்கத்தாவின் முடிவு சென்னைக்கு சாதகமானது. 

சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வந்தனர் ருதுராஜ் மற்றும் டூப்ளஸி. எப்படியும் அடிச்சே ஆடணும் என்று தொடக்கம் முதலே சென்னை அணி வீரர்கள் அடித்து ஆட தொடங்கினார்கள். ருதுராஜ் 32 ரன் எடுத்து 9 ஓவரில் நரைனின் பந்தில் அவுட்டானார். 

அடுத்து வந்த உத்தப்பா, தரமான 3 சிக்ஸ்ர்களை அடித்து 15 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார், அடுத்து வந்த மொயின் அலி மற்றும் டூப்ளஸியின் பார்ட்னர்ஷிப் ஆட்டத்திற்கு மேலும் வலுசேர்த்தது, டூப்ளஸி 59 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து 20 ஓவரின் கடைசி பந்தில் அவுட்டானார், மொயின் அலி 20 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. டூப்ளஸியின் அதிரடி ஆட்டத்தால், அவர் மட்டும்  7 பவுண்டரிகளை அடித்தார்.

அடுத்து வந்த கொல்கத்தா அணியினர் 193 ரன்கள்  என்ற இலக்குடன் களம் இறங்கினர். சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் தொடக்கமே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். வெங்கடேஷின் கேட்ச்சை தவறவிட்டார் தோனி. இது மிகப்பெரிய சிக்கலாகிடுமோ என்று சென்னை ரசிகர்கள் நினைக்க, வெங்கடேஷ் ஐயரோ 32 பந்தில் 50 ரன்களை கடந்துவிட்டார். கொல்கத்தா அணி 10 ஓவர் முடிவில் 91  ரன்கள் எடுத்திருந்தது. என்னடா இது சென்னைக்கு வந்த சோதனை… இருந்தும் சென்னை அணி தளராமல், பீல்டிங்கை மாற்றி அதிரடியை ஆரம்பித்தது. 

இதில் முதல் விக்கெட்டாக வெங்கடேஷ் அவுட்டாக, அடுத்து வந்த கொல்கத்தா வீரர்களும் அவுட்டாகி சென்றனர். ராணா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகிட, சுனில் நரைன், மோர்கன், தினேஷ் கார்த்திக், ஷாகிப், த்ரிப்பாட்டி சொற்ப ரன்களில் அவுட்டாகினர், இறுதியில் பெர்குசன் மற்றும் மாவி கொஞ்சம் அதிரடியாக ஆடினர். ஆனால் போட்டியே கைவிட்டு போச்சே… இனிமேல் இப்படி ஆடி என்ன பிரயோஜனம் என்பது போல் இருந்தது ஆட்டம். கொல்கத்தாவை பார்க்கவே பாவமாக இருந்தது. கொல்கத்தா அணியில் ஓப்பனிங் சரியாக இருந்ததே தவிர அடுத்துடுத்து வந்தவர் தன் பங்களிப்பை கொடுக்கவில்லை. இதனால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை அவசர ஆலோசனை..!!

Admin

விசிக துணை பொதுசெயலாளர் வீட்டில் ED ரெய்டு… ஏன்?

Admin

சென்னை திரும்பினார் ரஜினி.. விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள்

Admin

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம்… சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா…

Admin

எச்சில் தொட்டு, வாயால் ஊதி உறைகளைப் பிரிக்கக் கூடாது: சுகாதாரத்துறைச் செயலர் எச்சரிக்கை

Admin

தமிழ்நாடு அரசின் திறமைக்கு சவாலா? சென்னை பல்கலைக்கழக விவகாரம் என்ன?

Pamban Mu Prasanth

சேலத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Admin

மக்களவை தேர்தல் 2024: நீங்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டுமா?

Admin

முதல் ஐ.பி.எல். போட்டி: வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

சே.கஸ்தூரிபாய்

பப்ஜி மதன் வழக்கு நாளை மீண்டும் விசாரணை!

Admin

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லர் விலகல்

Admin

Leave a Comment