ருதுராஜ், தோனி அபாரம்… 9ஆவது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது சி.எஸ்.கே…

SHARE

நேற்று நடந்த முதல் குவாலிபையர் சுற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி அடைந்து பைனல்ஸ்க்கு முன்னேறியது. 

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங்கை ஆரம்பித்தது டெல்லி அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக வந்தனர் ஷிகர் தவன் மற்றும் ப்ரித்வி ஷா. சென்னைக்கு ஆரம்பமே அசத்தலாக இருந்தது, ஷிகர் தவன் 4ஆவது ஓவரிலேயே 36 ரன்களுடன் வெளியேற, ப்ரித்வி ஷா மட்டும் நிதானமாக ஆடி ரன் எடுத்தார். 

விக்கெட்கள் விழாததால் வேகம் கூட்டி அற்புதமாக விளையாடிய ப்ரித்வி ஷா 34 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஜடேஜா ஓவரில் அவுட்டானார். பின்வந்த ஸ்ரேயஸ் அயர், அக்ஷர் பட்டேல் அடுத்தடுத்து அவுட்டாகிட, ரிஷப் பந்த் மற்றும் ஹெட்மயரின் கூட்டணி டெல்லி அணிக்கு ரன்களை சேர்த்தது. 

ரிஷப் பண்ட் மற்றும் ஹெட்மயர் இருவரும் டெல்லியின் நிலை உணர்ந்து பொறுப்புடன் விளையாடினர். டெத் ஓவர்களை தெறிக்க விட்டனர் இருவரும். 35 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார் ரிஷப் பண்ட். இதனால் 20 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது டெல்லி அணி. 

அடுத்து வந்த சென்னை அணி 174 என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வந்தனர் ருதுராஜ் மற்றும் டூப்ளஸி. முதல் ஓவரே இடியானது சென்னைக்கு, நோர்க்யாவின் பந்து மிடில் ஸ்டெம்ப்பில் பட்டு எகிற டூப்ளஸியின் முதல் விக்கெட்டானார். 

அடுத்து வந்தவர் உத்தப்பா, என்னடா இது… இவர் இப்போ வர கூடாதே, தோனி என்ன பண்றாருன்னு புரியலையேன்னு நினைச்சுக்கிட்டு இருந்த ரசிகர்களுக்கு பேட்டால் பதில் கூறினார் உத்தப்பா. நல்ல டைமிங்கில், பந்துகளை அழகாகத் தட்டிவிட்டு, ருதுராஜுக்கும் நல்ல பார்ட்னர்ஷிப் குடுத்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த பார்டன்ர்ஷிப்பால் இருவரும் தங்களுடைய அரை சதங்களை அடித்தனர். ருதுராஜ் 50 பந்துகளுக்கு 70 ரன்களும், உத்தப்பா 44 பந்துகளுக்கு 63 ரன்களும் எடுத்தனர். டாம் கர்ரனின் பந்தில் உத்தப்பா அவுட்டாகிட, அடுத்து வந்த தாக்கூர், ராயுடுவும் அவுட்டாகிட, என்னதான் டா நடக்குது…ன்னுவிழி பிதுங்கினர் சென்னை ரசிகர்கள்.  

18 ஓவர் முடிவில் சென்னை அணி 149 ரன்கள் எடுத்திருந்தது. 18ஆவது ஓவரின் முதல் பந்தில் ருதுராஜ் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களத்தில் இருந்தது மொயின் அலி மற்றும் தோனி இணை. மொயின் அலி முதல் பந்தில் பவுண்டரி போக, தோனி முதல் பந்தை டாட் பால் ஆக்கி, அடுத்த பந்தில் சிக்ஸர் சென்றது. 19 ஓவர் முடிவில் 160 ரன்கள் எடுத்தது சென்னை அணி. 6 பந்துகளில் 13 ரன்கள் தேவை, 19ஆவது ஓவரின் முதல் பந்தை மொயின் அலி இழுத்து அடிக்க, அது பவுண்டரிக்கு செல்லாமல் ரபாடாவின் கையில் கேட்ச் செல்ல, அவுட்டானது விக்கெட். 

அடுத்து வந்தவர் ஜடேஜா, எப்படியும் ஜடேஜா காப்பாத்திடுவாருன்னு பாத்தா, நான் பாத்துக்குரேன்னு களத்தில் நின்றார் தோனி. 5 பந்துகளில் 13 ரன்கள் தேவை, ஸ்ரைக்கில் இருந்தது தோனி, அடுத்த இரண்டு பந்துகளும் ஃபோர் ஆகி பவுண்டரி சென்றது. அடுத்த பந்து வைட்டாக சென்னையின் வெற்றி ஓராளவுக்கு உறுதியானது, அடுத்து 3 பந்துகளில் 4 ரன்கள் தேவை, அடுத்து வந்த முதல் பந்துலேயே பவுண்டரிக்கு பந்தை பறக்க விட்டு தெறிக்க விட்டார் தோனி. 2 பால்கள் மீதம் இருக்கும்போதே தான் ஒரு சிறந்த ஃபினிஷர் என்று நிரூபித்தார்.

இந்த ஆட்டத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9ஆவது முறையாக பைனலுக்கு சென்றது.

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டோக்கியோ ஒலிம்பிக்கில் அபாரம்: அரையிறுதியில் நுழைந்தார் பி.வி.சிந்து

Admin

மீண்டு எழுந்த சென்னை… முதல் இடத்தைக் கைப்பற்றியது!.

இரா.மன்னர் மன்னன்

டோக்கியோ பாராலிம்பிக்..இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம்.. வரலாறு படைத்த பவினா

Admin

தங்கம் வென்றால் கொண்டாட தெரியும்.. ஆனால் அதுக்கு உதவ தெரியாது.. மோடி மீது கடுப்பான பயிற்சியாளர்

Admin

போட்டியின் போது மழை அதிகமானதால் டேக் ஆஃபில் சிரமப்பட்டேன்: மாரியப்பன் தங்கவேலு

Admin

இந்திய கிரிக்கெட் வீரரை 2வது முறையாக விவாகரத்து செய்த மனைவி…!!

Admin

சிஎஸ்கே அணியால் இந்திய அணியில் தோனி இணைவதில் சிக்கல் – ரசிகர்கள் ஏமாற்றம்…

Admin

தமிழ் வீரமே வாகையே சூடும் : ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழக வீரர்களுக்கு கமல் ஹாசன் வாழ்த்து!

Admin

மழையால் ரத்தான டிஎன்பிஎல் முதல் ஆட்டம்: ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

Admin

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

Admin

சிலிர்த்து எழுந்த சி.எஸ்.கே… மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தியது…

சே.கஸ்தூரிபாய்

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

Leave a Comment