டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த இந்திய சிங்கப்பெண்கள்…!

SHARE

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி பிரிவில் இந்திய மகளிர் அணி, அரையிறுதிக்கு முதல் முறையாக முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொண்டது.

வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டம் என்பதால் தொடக்கம் முதலே மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. முதல் கால் பகுதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

2வது கால்பகுதி நேரத்தில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் இந்திய அணிக்கான முதல் கோலை அடித்தார். பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய வீராங்கனைகள் முயன்றபோதிலும் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் 1-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று 41 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து அரையிறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி அர்ஜென்டினா அணியை எதிர்கொள்கிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

புதிய தோற்றத்தில் தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Admin

109 கோல்கள் விளாசிய ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ பரிசு

Admin

ஹர்பிரீத்தின் பந்துவீச்சில் சுருண்டது பெங்களூரு… வென்றது பஞ்சாப்..!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: இந்திய அணி நிதான ஆட்டம்

Admin

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

ஐபிஎல்-லில் தனது முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே. வெற்றியைத் தவறவிட்டது!

சே.கஸ்தூரிபாய்

இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர் திடீர் ஒத்திவைப்பு

Admin

ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்!

Admin

மழையால் ரத்தான டிஎன்பிஎல் முதல் ஆட்டம்: ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

Admin

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது காரணம் என்ன?

Admin

Leave a Comment