ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

SHARE

ஐபிஎல் தொடரின் நேற்றைய முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராய்ல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் 55 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

டெல்லி

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பீல்டிங் செய்வதாக கூறியது. புது கேப்டன்சியின் கீழ் சன்ரைசர்ஸ் அணி வார்னர், சுசித், கவுல் ஆகியோருக்கு மாற்றாக நபி, புவனேஷ்வர், சமத் ஆகியோருடன் களம் இறங்கியது. ராஜஸ்தான் அணியும் உனத்கட், சிவம்டூபே க்கு மாற்றாக தியாகி, அனுஜ் ரவாட் ஆகியோரைக் களம் இறக்கியது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால். மூன்றாவது ஓவரிலேயே முதல் விக்கெட் வீழ்ந்தது. ரஷித் கானின் ஓவரில் 2 பவுண்டரிகளை அடித்து, எல்பிடபிள்யூ வில் வெளியேறினார் ஜெய்ஸ்வால். அடுத்து பட்லருடன் கைக்கோர்த்தார் சஞ்சு சாம்சன். பவர்பிளே ஓவர்களில் 42 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி. ஆனால் ஆட்டமே பவர்பிளேவிற்கு பிறகுதான் ஆரம்பமானது. 

7ஆவது ஓவரில் 2 சிக்ஸர் 2 வைடு என 16 ரன்களை கொடுத்தார் விஜய்சங்கர். யார் பந்தை வீசுகிறார்கள் என்ற கவலை இல்லாமல் விளையாடினர்கள் பட்லரும் சாம்சனும். 13ஆவது ஒவரில் தன்னுடைய அரை சதத்தை கடந்தார் பட்லர். ரன்களை அள்ளி குவித்தது இந்தக் கூட்டணி. ஆட்டத்தின் 17வது ஓவரில், சங்கரின் பந்தில் தூக்கி அடித்து கேட்ச் ஆனது சஞ்சு சாம்சனின் விக்கெட். 48 ரன்களை எடுத்து வெளியேறினார் சாம்சன். அதே ஓவரின் கடைசி பந்தில் 1 ரன்னைத் தட்டி விட்டு ஐபிஎல்லில் தன்னுடைய  முதல் சதத்தை கடந்தார் பட்லர் அதுவும் 56 பந்துகளில். பின்னர் 19ஆவது ஒவரில் சந்தீப்பின் பந்தில் போல்ட் ஆனது பட்லரின் விக்கெட். 64 பந்துகளில் 124 ரன்களை எடுத்து வெளியேறிய பட்லரை, ’சூப்பர் தல’ என்று வரவேற்றனர் ராஜஸ்தான் அணியினர். இறுதியில் 220 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான் அணி. 

சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர் மணீஷ் பாண்டே மற்றும் பேர்ஸ்டோ. நிதானமாக, பந்துகளை கவனித்து ஆடி பவர்பிளே ஓவரின் முடிவில் 57 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ் அணி. ’பரவாயில்லையே புது கேப்டன்சியில ஆட்டம் நல்லாதான் போயிட்டு இருக்குன்’ம்மு சொல்லி முடிப்பதற்குள் அடுத்தடுத்து விழுந்தன விக்கெட்கள். 7ஆவது ஓவரில் முஸ்தாபிசூரின் பந்தில் போல்ட் ஆனது மணீஷ் பாண்டேவின் விக்கெட். அடுத்து 8ஆவது ஓவரில், ராகுல் திவாட்டியாவின் பதில் கேட்ச் ஆனது பேர்ஸ்டோவின் விக்கெட். சன்ரைசர்ஸின் முக்கிய விக்கெட்டுகள் வெளியேறின. புது கேப்டன் வில்லியம்சன், அவரது பங்குக்கு அவராவது அடித்து ஆடி இருக்கலாம். தியாகியின் பந்தில் வில்லியம்சன் அடித்த  பந்து மோரிஸிடம் கேட்ச் ஆக 21 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார் வில்லியம்சன். அடுத்தடுத்த வீரர்களும் பெரிதாக ரன் எடுக்கவே இல்லை. 18 வது ஓவரிலேயே 8 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் 20 ஓவருக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது சன்ரைசர்ஸ் அணி. 

சன்ரைசர்ஸ் அணியினர் அதிகபட்ச ரன் வித்தியாசத்தில் அடைந்த தோல்வி போட்டி இதுதான். நன்றாக விளையாட கூடிய வார்னரை விலக்கி விட்டு ஆடினால் இது தான் கதி என்பது போல் இருந்தது ஆட்டம். கேப்டன்ஸி சரியில்லை என்பதற்காக கேப்டன் பதவியை பறிப்பது நியாயம்தான் என்றாலும் ஆட்டத்தில் இருந்து விலக்குவது சரியான முடிவா? – என்ற கேள்விதான் எழுகிறது. இந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணி பிளேஆஃப் செல்வது கேள்விக்குறியாகி உள்ளது.

சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ஆர்பிஐ

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் – ஹால் டிக்கெட் வெளியீடு

Admin

இந்த கொரோனா காலத்திலும் அதிகார வெறியா? பாஜக மீது சீறும் உத்தவ் தாக்ரே

Admin

ஒரு வாரமாக தொடரும் உண்ணாவிரதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும்

Pamban Mu Prasanth

மக்களவை தேர்தல் 2024: நீங்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டுமா?

Admin

வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

Admin

டோக்கியோ பாராலிம்பிக்..இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம்.. வரலாறு படைத்த பவினா

Admin

எங்கே செல்லும் இந்தப் பாதை? – அக்னிபாத் கிளப்பும் கேள்விகள்…

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம்… 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..?

Admin

கங்கை நதியில் கொரோனா வைரஸ் பரவலா..? ஆய்வின் முடிவில் தகவல்

Admin

விரைவில் “டிஜிட்டல் ரூபாய்”: ஆர்வம் காட்டும் ரிசர்வ் வங்கி

Admin

மார்ச் 31 – ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்

Admin

Leave a Comment