இறுதிப் போட்டியில் தோனியின் மனித நேயம்… வைரல் வீடியோ…

SHARE

ஐபிஎல் டி 20 இறுதிப் போட்டியில் தோனி செய்த செயல் வைரல் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.

ஐபிஎல்லின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4 வது முறையாக  கோப்பையையும் வென்றது.

கடந்த சீசனில் ஃபிளே ஆஃப் சுற்றுகே தகுதி பெறாமல் முதலில் வெளியேறிய அணி சென்னை சூப்பர் கிங்ஸ். அப்போ தோனி சொன்ன வார்த்தைகள், ’முன்பைவிட வலிமையோடு திரும்பி வருவோம்’ அப்படிங்கிறது தான். அதப் இப்போ உண்மையாக்கி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அதனால தான் சார் அவர் ’தல’…

சென்னை சூப்பர் கிங்ஸின் போட்டி என்றாலே எப்பவும் பரபரப்பும், அதிரடிக்கும் குறைச்சல் இல்லை என்றே சொல்லலாம். அதே போன்ற பரபரப்புடன் தான் இறுதி போட்டியும் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஒவர்களில் 192 ரன்கள் எடுத்திருந்தது. இந்த இமாலய இலக்கை எட்ட களம் இறங்கிய கொல்கத்தா அணி, ஆரம்பம் சரியாக அமைந்தாலும், ஒரு விக்கெட் விழுந்தவுடன் அடுத்தடுத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறியதால், 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இந்த பரபரப்பான போட்டியில் தோனி செய்த செயலை இப்போது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். கொல்கத்தாவின் ஃபீல்டிங்கின் போது த்ரிப்பாட்டிக்கு காலில்  அடிப்பட்டதால், அவர் ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார். பிறகு பேட்டிங் செய்வாரா? – என்பது கேள்விக்குறியானது. 

ஆனால் கொல்கத்தாவின் பேட்டிங்கில் தொடர் விக்கெட் வீழ்ச்சியால், 15ஆவது ஓவருக்கு ஆட வந்தார் த்ரிப்பாட்டி. 

காயத்துடன் ஆடி 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது த்ரிப்பாட்டியால். அவர் அவுட்டாகி வெளியேறும் போது தோனி திரிப்பாட்டிக்கு ஆறுதல் கூறி முதுகில் தட்டிக் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக் பாஸ் நாட்கள்: நாள் 3. இமான் அண்ணாச்சியின் ‘வானத்தைப் போல…’

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்… பாண்டா கரடிக்குட்டிகளின் வைரல் வீடியோ

Admin

டோக்கியோ ஒலிம்பிக்கில் அதிரடி…வில்வித்தையில் இந்தியா அசத்தல் வெற்றி

Admin

26 ஆண்டுகால புகைக்கும் பழக்கம்… மீண்டது எப்படி? – எழுத்தாளரின் அனுபவப் பதிவு…

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

அப்படி சொல்லாதடா சாரி, மனசெல்லாம் வலிக்குது.. மஞ்சுரேக்கரை கலாய்த்த அஸ்வின்

Admin

கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழக நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்

Admin

தள்ளி போகாதே என்னையும்…. நண்பனை பிரிய மனமில்லாமல் துரத்தி ஓடும் நாய்

Admin

டுவிட்டரில் உதவி கேட்ட வீராங்கனை: ரூ.6.77 லட்சம் வழங்கிய கோலி

குதிரையுடன் ரேஸ் ஓடிய தோனி… வைரலாகும் வீடியோ

Admin

ரஜினிகாந்தாக மாறிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.. வைரல் வீடியோ

Admin

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

Leave a Comment