இங்கிலாந்தை ஓட ஓட விட்ட இந்திய அணி – ஓவல் டெஸ்டில் அபார வெற்றி

SHARE

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களும், இங்கிலாந்து அணி 290 ரன்களும் எடுத்தன.

பின்னர் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சைதொடங்கிய இந்திய அணி 466 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று 5 வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.

இரு அணிகளும் வெற்றிக்காக மல்லுக்கட்டிய நிலையில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது.

அந்த அணியில் அதிகப்பட்சமாக ஹசீப் ஹமீத் 63 ரன்களும், ரோரி பர்ன்ஸ் 50 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் அதனைப் பயன்படுத்த தவறினர். இதனால் 92.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, ஜடேஜா, தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

இந்திய அணியை வழிநடத்த அவரே சிறந்தவர் : தோனியை புகழ்ந்த பிசிசிஐ

Admin

சாதித்த சூப்பர் கிங்ஸ்… பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தேர்வானது!.

இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

Admin

தோனிக்காக உயிரையும் கொடுக்கத் தயார்… ரசிகர்களை நெகிழ வைத்த கே.எல்.ராகுல்

Admin

மழையால் ரத்தான டிஎன்பிஎல் முதல் ஆட்டம்: ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

Admin

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

முதல் ஐ.பி.எல். போட்டி: வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

சே.கஸ்தூரிபாய்

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா : பதட்டத்தில் ஒலிம்பிக் போட்டி!

Admin

ஐபிஎல் தொடருக்காக 5வது டெஸ்ட் போட்டி ரத்து ? – சர்ச்சையில் சிக்கிய இந்திய அணி

Admin

அழகிப்போட்டி மேடையில் மியான்மருக்கு உதவி கேட்ட அழகி: துணிச்சலை வியந்த அரங்கம்!.

ரொனால்டோ செய்த சம்பவத்தால் நஷ்டத்தை சந்தித்த கொகோ கோலா நிறுவனம்

Admin

Leave a Comment