இப்படியெல்லாம் சீரியல் எடுத்தா ஜெயில் தான்… அதிர வைத்த திருவள்ளூர் எஸ்.பி.,

SHARE

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற பெயரிலான சீரியல் ப்ரோமோ சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.

விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஹீரோயினாக நடித்திருப்பவர் , அமெரிக்காவிலிருந்து தமிழ்நாடு வந்திருப்பது போலவும், அவர் ஒரு கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

அப்போது அங்கு வரும் ஹீரோ அந்த கோவிலில் திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடியை தட்டி கேட்டு தாலியை பறிப்பதும், அதனை பார்த்து கோபமடையும் ஹீரோயின் அவரிடம் பிரச்சனை செய்வது போலவும் அடுத்தடுத்து காட்சிகள் உள்ளது.

இதனால் கோபமாகும் ஹீரோ அம்மன் சிலையில் உள்ள ஒரு தாலியை எடுத்து வலுக்கட்டாயமாக கட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இதை பார்த்த திருவள்ளூர் மாவட்ட, போலீஸ் கண்காணிப்பாளர் வருண் குமார் ஐபிஎஸ் விஜய் டிவி பதிவில் கமெண்ட் ஒன்றை வெளியிட்டார். அதில் இதுபோன்ற செயல்களுக்கு சட்டத்தில் இடம் இல்லை.

கல்வி நிலையங்கள், கோவில்கள், பஸ் நிலையம், ரயில்வே நிலையம், சினிமா தியேட்டர், பூங்கா , கடற்கரை, திருவிழா நடைபெறும் பொது இடங்கள் உட்பட எந்த ஒரு இடத்தில் வைத்து பெண்களுக்கு தொல்லை கொடுத்தாலும் அந்த நபருக்கு மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை இணையவாசிகள் பலரும் வரவேற்றுள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வெளியானது சீயான் 60 படத்தின் புதிய போஸ்டர் !

Admin

பிகில் படத்தை காண்பித்து சிகிச்சை – சிறுவனை சந்திக்க நேரம் ஒதுக்கிய விஜய்

Admin

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிக்பாஸ் பிரபலம் !! நலமுடன் இருப்பதாக விளக்கம்!!

Admin

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

நடிகர் விவேக் மரணம்… விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்

Admin

போஸ்டர் தேதியை அறிவித்த போனி கபூருக்கே போஸ்டர்: அஜித் ரசிகர்கள் அமர்களம்…

Admin

பிரமாண்ட படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறாரா ஷாலினி..?

Admin

சர்கார் சர்ச்சை…ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கு ரத்து!

Admin

என்னப்பா.. Money Heist பார்க்கணுமா தாராளமா லீவு எடுத்துக்கோங்க : தாராளம் காட்டிய நிறுவனம்!

Admin

கொஞ்சம் காதலால் : வைரலாகும் கியரா அத்வானி வீடியோ!

Admin

அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்.. தனி விமானத்தில் பயணிக்க மத்திய அரசு அனுமதி

Admin

நடிகர் விவேக் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி… ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு

Admin

Leave a Comment