பிக்பாஸ் நாட்கள்… முதல் நாள். யாருக்கு என்ன வேலை?

SHARE

தொடக்க நாளில் பிக் பாஸ் போட்டியாளர்களை கமல் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். வீட்டின் முதல் நாளில் 18 போட்டியாளர்களும், அவர்களுக்குள் அறிமுகப்படுத்திக் கொண்டனர். அது தான் பிக் பாஸின் நேற்றைய நாளாக இருந்தது. 

எல்லாரையும் பாக்குற நமக்கே அவங்கள அவ்ளோ சீக்கிரம் பேரோடு நினைவுல வச்சிக்க முடியல, அப்புறம் அவங்களுக்கும் அப்டித்தானே இருக்கும். அவரவர் தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டனர். 

ஆரம்பமே பிக் பாஸுக்கு நஷ்டம் ஆயிடுச்சு, நிரூப் தோட்டத்தில் இருந்த குடைய உடைச்சிட்டாரு. அவர் இருக்குற உயரத்துக்கு நெட்டி முறிச்சாக்கூட பக்கத்துல இருக்குற பொருள்லாம் விழத்தான் செய்யும். பாவம் அவர் என்னப் பண்ணுவாரு. 

அப்புறம் நம்ம இமான் அண்ணாச்சி எல்லாருக்கும் ஆபத்பாண்டவனாய் வந்து போனார். பாத்ரூம்ல சுடுதண்ணிக்கு வலதா இடதான்னு எப்படி குழாய திருப்பணும் யோசிச்சிட்டு இருந்தவருக்கு உதவி செஞ்சார். அப்புறம் நாடியா தாமரை கிட்ட உங்க கூட பேசினா பாசிட்டிவ்வா இருக்குன்னு சொன்னாங்க. ஆனா தாமரைக்கு பாசிட்டிவ்னா என்னன்னு தெரியாததுன்னால இமான் அண்ணாச்சிகிட்ட கேட்க அவரும் ’நல்லவிதமா தோணுது’ன்னு அப்டின்னு அர்த்தம்னு சொன்னாரு.  இனிமே யாருக்கு என்ன சந்தேகம்னாலும் என்னையே கேளுங்கன்னாரு. அப்புறம் வருண் தாமரை செல்விகிட்ட இருந்து விபூதி வாங்கி நெற்றியில் இட்டு வாயிலும் போட்டுக்கொண்டார். எல்லாருக்கும் தேவையான அனைத்து மளிகை மற்றும் அழகு சாதன பொருட்களும் ஸ்டோர் ரூமிற்கு வர அவரவர் ஆளுக்கொரு வேலையை செய்தனர். என்ன ஒரு ஒற்றுமை!

இதுக்கு நடுவுல ராஜு பாத்ரூம் ஏரியாவுல நாடியாவ பாத்து நீங்க அமலா மாதிரி இருக்கிங்கன்னு சொல்ல, அவங்க உடனே தன்னை அமலா பால் என்று நினைத்து பேச, ராஜு அமலா பால் இல்லைங்க, அமலா நாகர்ஜீனான்னு சொல்ல ஓ அப்டியா இருக்கன்னு கண்ணாடிய பாத்து சிரிச்சாங்க. 

என்ன பிக் பாஸ் இன்னும் வரலையேன்னு பாத்தா, வந்தாரு. வந்து தலைவர தேர்ந்தெடுப்பாருன்னு பாத்தா, மத்த வேலைகளுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்க சொன்னார். போட்டியாளர்களே தானாக முன் வந்தாங்க. ராஜு பாத்ரும் கிளீனிங்கும், சின்னபொண்ணு சமையலுக்கும், நமீதா பாத்திரம் சுத்தம் செய்வதற்கும், பாவ்னி மற்றும் நிரூப் வீடு சுத்தம் செய்வதற்கு போட்டியிட, அப்புறம் நிரூப்பே நீங்களே பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டாரு. 

பாத்ரூம்ல உக்காந்து நாடியாவ கலாய்ச்சது, பாத்ரூம் கிளினிங்க வாலன்ட்டியரா எடுத்ததுல்லாம் பாத்தா, நமக்கு கவின் முகம் தான் வருது. பாத்ரூம் கிளினிங் ஆரம்பிக்கவே இல்லை ஆனா அதுக்குள்ள கிளவுஸ்  வேணும், சானிடைசர் வேணும்னு பிக் பாஸ்கிட்ட கேட்டுட்டு இருந்தாங்க. அவரும் அவரது டீமும். ஆனா அந்த பாத்ரூம் கிளினிங்கே சரியா செய்யலன்னு குற்றம் சொல்ல வந்தாங்க பிரியங்கா ஆனா அவரை பங்கமாய் கலாய்த்து அனுப்பினார் ராஜூ. அப்ப பிரியங்கா முகம் லேசா சந்திரமுகியா மாறினத சிலர் கவனிச்சு இருக்கலாம்!. 

தாமரை செல்வி பாவ்னிய பாத்து, ’உங்களுக்கு என்ன 16.. 17 வயசு இருக்குமா?’ன்னு வாய் குசாம கேட்டாங்க. வெப் சீரீஸ்னா என்னன்னு பாவ்னிகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டாங்க. இங்கதான் ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிக்கிறன்னு சொன்னாங்க. 

சமையல் டீம் அவங்க வேலைய ஆரம்பிச்சாங்க, டீ னு ஒன்னு போட்டாங்க. பாக்கவே… ஆனா 18 பேருக்கு டீ போடுறது கொஞ்சம் கஷ்டம் தான்.  

ஆனால் நேற்று 18 போட்டியாளர்களில் ராஜூ மட்டும் சற்று தனியா தெரிந்தார். அவர் மட்டும் கொஞ்சம் கேஷுவல்லா இருந்தாரு. பெண்களிடம் கல்யாணம் ஆயிடுச்சான்னு கேட்டது, தாமரை செல்விய பேய் கதை சொல்லி பயமுறுத்தியது, பாத்ரூம் பொறுப்புன்னு கேமரால அடிக்கடி தெரிஞ்சாரு. பரபரப்பில்லாமல் கடந்தது இரண்டாம் நாள்.

யாருக்கு என்ன வேலை?


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பரிதாபமாக காட்சியளிக்கும் சிம்பு… கௌதம் படத்திற்காக எடை குறைந்து அசத்தல்

Admin

பாசிச போக்கு… ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவுக்கு உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு!

Admin

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்… திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்…

Admin

முதல்வரையே டேக் செய்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மீரா மிதுன் ட்வீட்

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள் – 19. “காசைத் திருடினாலும் சலுகை!”

இரா.மன்னர் மன்னன்

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது… அன்பு மழை பொழிந்த பவித்ரா நடராஜன்

Admin

இயல் இசை நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்!

Admin

அடுத்த ஆண்டிலும் சி.எஸ்.கே..?தோனி சூசகம்… ரசிகர்கள் மகிழ்ச்சி…

இரா.மன்னர் மன்னன்

ஷங்கரின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோயினா? – வெளியான தகவலால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment