சர்கார் சர்ச்சை…ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கு ரத்து!

SHARE

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சர்கார் படம் தொடர்பாக போலீசார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய், நடிகை கீர்த்திசுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம் சர்கார். இந்த படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதாக முருகதாஸ் மீது கடந்த 2018 ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முருகதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், படத்திற்கு தணிக்கை வழங்கிய பிறகும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக ஏன் செயல்படுகிறீர்கள்? என கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி தண்டபாணி முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி திரைப்படத்தை தணிக்கை செய்த பிறகு அதற்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கு காழ்ப்புணர்ச்சியோடு, தனி நபரால் கொடுக்கப்பட்ட புகார் என்று கூறி அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரு லட்சத்தை அபராதமா கட்ட விருப்பமில்லை : சொகுசு கார் வழக்கில் விஜய் தரப்பு வாதம்

Admin

சிம்புவின் படம் நாளை ஓடிடியில் ரிலீஸ்!

Admin

ஜெய்பீம் காலண்டர் காட்சி சர்ச்சை – நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

ஜகமே தந்திரம் படத்தில் இந்த 2 பாடல்கள் இடம்பெறாது…!

Admin

ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது. யார் அந்த பால்கே?

Admin

தி ஃபேமிலி மேன் 2 தொடரை உடனே தூக்குங்க: அமேசானுக்கு கடிதம் எழுதிய சீமான்

Admin

கொரோனாவால் இணைந்த ஜோடி: பாலிவுட்டில் ருசிகரம்

Admin

நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு… அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்

Admin

நடிகர் மம்முட்டி மீது வழக்குப் பதிவு காரணம் என்ன??

Admin

எனக்கு எண்டே கிடையாது: நடிகர் வடிவேலு

Admin

ரூ.1.3 கோடிக்கு கார்!: குக் வித் கோமாளி குழுவினர் குதூகலம்…

Admin

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

Leave a Comment