கில்லி ரீரிலீஸ் ஆகும் தேதி குறித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் பரவி வருகின்றன. ரசிகர்களும் இதை நம்பி உற்சாகத்தில் லைக்குகளை அள்ளி வீசி துள்ளி குதித்து வருகின்றனர்.
ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பாக ஏதும் இல்லை. இந்த நிலையில், ‘கில்லி’ தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தனியார் ஊடகம் ஒன்றுக்கும் அளித்த பேட்டியின்போது விளக்கமளித்துள்ளார்.
அவர் பேசியதாவது, “இல்லை, பரவி வரும் செய்திகள் உண்மையல்ல. அதை யார் அப்படிப் பதிவிட்டார்களென தெரியவில்லை. நாங்களே அடுத்த இரண்டு நாள்களுக்குள் பேசி ‘கில்லி’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை முடிவு செய்யவுள்ளோம். இப்போது வரை மார்ச் மாதம் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத் தொடக்கத்திலோ ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்றுதான் யோசித்து வருகிறோம். தேதியை பார்த்துவிட்டு சரியான நேரத்தில் வெளியிடத் திட்டமிடுகிறோம்” என தெரிவித்துள்ளார்.
கில்லி மீண்டும் ரிலீஸாகும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அவர். அதாவது வருவது உறுதி… ஆனால் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.