பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விட்டது, டீசல் விலை ரூ.100 யை நெருக்கியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.
விலை உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘ஒரு வழியாக 100 ரூபாயை எட்டி விட்டது. உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டு தான் சைக்கிள் ஓட்டுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சைக்கிளுக்கு மாற வேண்டுமென மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.