சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி… ரசிகர்கள் அதிர்ச்சி

SHARE

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபரால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உள்ள நடிகர் சூர்யா 2டி எண்டெர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

இதன்மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்ட நிலையில் தற்போது ‘உடன் பிறப்பே’, ‘ஓ மை டாக்’, ‘ராமே ஆண்டாலும், ராவணே ஆண்டாலும்’, ‘ஜெய் பீம்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் 2டி நிறுவனத்தின் பெயரில் போலி மின்னஞ்சல் முகவரி, லோகோவைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 2டி நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நடிக்க வாய்ப்பு தேடும் நபர்களை குறிவைத்து போலி மின்னஞ்சல் முகவரி, 2டி நிறுவனத்தின் லோகோ உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சிலர் அழைப்பு விடுப்பதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது.

எங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி பணம் பறிக்க முயன்ற குற்றத்துக்காக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளோம். வருங்காலங்களில் இதுபோன்ற நபர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்.

மேலும் இதுபோன்ற நபர்களிடம் உங்களின் சுய விவரங்களை தெரிவிக்காதீர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சூர்யாவை தொடர்ந்து நடிகர் கார்த்தியும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு!

Admin

“அரசியலுக்கு வருவேன்…ஆனால்…” – கங்கனாவின் அடுத்த அதிரடி

Admin

ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்

Admin

நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்… விரைவில் கைது நடவடிக்கை?

Admin

டெடியாக நடித்தது இவர்தான்: புகைப்படம் வெளிட்ட ஆர்யா

Admin

எனக்கு எண்டே கிடையாது: நடிகர் வடிவேலு

Admin

விஜய் இந்த ஜாதி தான்… கோபத்தில் பள்ளியை மிரட்டிய எஸ்.ஏ.சந்திரசேகர்…

Admin

பாசிச போக்கு… ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவுக்கு உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு!

Admin

நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு… வேறு அமர்வுக்கு மாற்றம்

Admin

நடிகை மீரா மிதுன் புழல் சிறையில் அடைப்பு!

Admin

சூர்யா – கார்த்தி முதன்முதலாக எடுத்துக்கொண்ட செல்பி.. இணையத்தில் வைரல்

Admin

வெளியானது சீயான் 60 படத்தின் புதிய போஸ்டர் !

Admin

Leave a Comment