நடிகை மீரா மிதுன் புழல் சிறையில் அடைப்பு!

SHARE

பட்டியலின மக்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட, நடிகை
மீரா மிதுன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர்
நடிகை மீரா மிதுன்.

இவர், பட்டியலின மக்கள் மற்றும் திரைத்துறையில் பணியாற்றும் பட்டியலினத்தவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகள் அவர் மீது புகார் அளித்திருந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் அவர கேரளாவில் நட்சத்திர விடுதி ஒன்றில் ஆண் நண்பருடன் தங்கியிருந்த
அவர், நேற்று கைது செய்யப்பட்டார்.

அவரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்,இன்று சென்னை அழைத்து வந்த நிலையில்அவருடைய ஆண் நண்பர் அபிஷேக் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் குடியிருப்பில் உள்ள 7 வது அமர்வு நீதிபதி கிருஷ்ணன் முன்பு நடிகை மீரா மிதுன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவருக்கு வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீரா மிதுன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Admin

“இசையுலகின் இளம் புயல்” ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் இன்று…!

Admin

நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்… விரைவில் கைது நடவடிக்கை?

Admin

வழியெங்கும் வாக்குவாதம்… சென்னை கொண்டு வரப்பட்டார் மீரா மிதுன்…

Admin

பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்யும் சன்னி லியோன்!

Admin

ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது. யார் அந்த பால்கே?

Admin

40 திருமணம் கூட செய்துகொள்வேன்: கடுப்பான வனிதா விஜயகுமார்

Admin

எனது பிரச்சினையை தீர்த்து வைத்தவர் இவர்தான் – உண்மையை போட்டுடைத்த வடிவேலு

Admin

நேரடியாக டிவியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்…!

Admin

டிரெண்டிங்கில் ‘எஞ்சாய் எஞ்சாமி’

Admin

சியான் படத்தில் சிம்ஹா: கார்த்திக் சுப்பராஜ் அறிவிப்பு

Admin

மூன்றாவதாக ஒரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் பலி… தொடரும் சோகம்…

Leave a Comment