டிக்டாக் செயலி மூலம் பிரபலமான சூர்யா தேவி தற்கொலை செய்து கொள்ள போவதாகக் கூறி, காவல் ஆணையருக்கு வீடியோ அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வசிக்கும் சூர்யா தேவி டிக்டாக் செயலி மூலம் பிரபலமானர். அவரின் பொழுதுபோக்கே திரைப்பட நடிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்களை கடுமையாக திட்டி வீடியோ வெளியிடுவது தான்.
இந்நிலையில் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன், ரவுடிபேபி சூர்யாவின் ஆண் நண்பரான சிக்கந்தர் என்பவரை காலணியால் அடித்து அதை வீடியோவாக வெளியிட்டிருந்தார். இதற்கு சூர்யாதேவி மீது மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், சூர்யா தேவி தலைமறைவானார். இந்நிலையில் மதுரை காவல்துறை ஆணையருக்கு தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி, சூர்யா தேவி வீடியோ அனுப்பியுள்ளார்.
இதனால் உடனடியாக அப்பகுதிக்கு வந்த போலீசார், சூர்யாதேவி நாடகமாடியதை அறிந்து கொண்டு, அட்வைஸ் செய்து உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.