வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்.. செய்வதறியாது திகைத்த ஒன் பிளஸ் நிறுவனம்

SHARE

ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு-2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு 2 5ஜி மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை கடந்த ஜூலை மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.இதில் 12 ஜிபி ரேம், 32 எம்பி செல்ஃபி கேமரா, 50 எம்பி பிரைமரி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1200-ஏஐ பிராசஸர் ஆகிய சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருந்தது.

இதனை தனது தந்தைக்கு வாங்கிய நபர் ஒருவர் வெடித்து சிதறியதாகவும், கட்டில் மீது எரிந்துகண்டிருந்த போனை தனது தந்தை தட்டி விட்டதாகவும் புகார் தெரிவித்தார். அவர் புகைப்படங்கள் எதுவும் வெளியிடாத நிலையில், அவரின் ட்விட்டர் பதிவு அடுத்த சில மணி நேரங்களில் அழிக்கப்பட்டது.

இந்நிலையில் ட்விட்டரில் ஒன்பிளஸ் நிறுவனம் அந்த நபருக்கு பதில் அளித்துள்ளது. அதில், “எதிர்பாராதவிதமாக அரங்கேறிய சம்பவத்தால் உங்களின் தந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நம்புகிறோம்.

இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, இதற்கான காரணத்தை கண்டறிய தயவு செய்து தகவல் அனுப்புங்கள்” என தெரிவித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அட்டகாசமான “ஆடி ஆஃபர்” … களைக்கட்டும் அமேசான் சிறப்பு விற்பனை

Admin

கண்ணீருடன் விடைபெற்ற லியோனல் மெஸ்சி – வைரலாகும் வீடியோ!

Admin

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள் – 20. “பல்லைப் பிடுங்கிய கமல்”

இரா.மன்னர் மன்னன்

கொஞ்சம் காதலால் : வைரலாகும் கியரா அத்வானி வீடியோ!

Admin

சிரிக்க வைக்கிறதா அமேசானின் ‘எங்க சிரி பார்ப்போம்’ ரியாலிட்டி ஷோ?

மறைந்த இசை கலைஞருக்காக சிறப்பு கூகுள் டூடுள் வெளியீடு..!!

Admin

டிவியில் நியூஸ் கேட்டபடி, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் முதல்வர் ! வைரலாகும் வீடியோ

Admin

ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Admin

நம்ம தல தோனியா இது.. வித்தியாசமான தோற்றத்தில் கலக்கும் தோனி… வைரலாகும் புரோமோ!

Admin

‘ஏ..தள்ளு..தள்ளு’ – பழுதான ரயிலை தள்ளிக்கொண்டு சென்ற மக்கள்

Admin

இணையத்தில் வைரலாகும் குட்டி மீராபாய் பானு!

Admin

Leave a Comment