நான் யார் தெரியுமா.. ஏன் காரையே நிறுத்துவியா… போலீசாரிடம் நடுரோட்டில் சண்டை போட்ட பெண்.. வைரல் வீடியோ

SHARE

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம்அதிதீவிரமடைந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன அதுமட்டுமின்றி தளர்வுகளற்ற ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது.

அவசரம் மற்றும் மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அரசு அனுமதித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்து கொரோனவிற்கு ஆளாக வேண்டாம் என தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியில் சுற்றுவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து காவலர்கள் இன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவையின்றி காரில் வந்த இரண்டு பெண்களை போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் ஒருவர் காவல்துறையினருக்கு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் காவலர்களை ஒருமையில் பேசத்தொடங்கினார்.

என்ன பார்த்து ஏய்-ன்னு சொல்றியா.. இப்ப காட்டடா… மவனே உன் யூனிபார்ம் கழட்டிடுவேன் ஜாக்கிரதை.. என் கார் ஏன் நிறுத்திற.. ஏய் எல்லா காரையும் நிப்பாட்டுன்னு..சாலையில் தொடர்ந்து ஒருமையில் போலீஸாரை பொது வெளியில் தவறாக பேசினார்.

போலீஸார் அவரை மாஸ்க் அணிய சொல்லும் போது.. மேலும் ஆத்திரத்தில் சத்தம் போட தொடங்கினார். காவல்துறையினரை பணி செய்யவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணின் வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிரிக்க வைக்கிறதா அமேசானின் ‘எங்க சிரி பார்ப்போம்’ ரியாலிட்டி ஷோ?

காவல் ஆணையருக்கு வீடியோ அனுப்பி தற்கொலை மீரட்டல் விடுத்த சூர்யா தேவி

Admin

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது… அன்பு மழை பொழிந்த பவித்ரா நடராஜன்

Admin

கையில் மயிலிறகு கடலுக்குள் வழிபாடு… இப்படி ஒரு கோமாளி பிரதமரா?

Pamban Mu Prasanth

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

மீண்டும் மீண்டும் சர்ச்சை: என்னதான் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி?

Pamban Mu Prasanth

குதிரையுடன் ரேஸ் ஓடிய தோனி… வைரலாகும் வீடியோ

Admin

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

Admin

என் இனிய பானிபூரி..திருமணத்தில் பானிபூரியை மாலையாக அணிந்து கொண்ட பெண்!

Admin

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

இனி சூப்பராக போட்டோ எடுக்கலாம்… செல்ஃபிக்கு எதிராக இணையத்தில் வைரலாகும் புதிய செயலி

Admin

ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி

Admin

Leave a Comment