டிரெண்டிங்கில் ‘எஞ்சாய் எஞ்சாமி’

SHARE

செ.கஸ்தூரி 

ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய முயற்சிக்காக பாடகி தீ பாடிய தனியிசைப்பாடல் டிரெண்டிங்கில் ஹிட் அடித்து உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் திரைப்பட இசைக்கு பெரிய சந்தை இல்லை. அங்கு இசைக் குழுக்களின் ஆல்பங்கள் எனப்படும் தனியிசைப் பாடல்கள்தான் சக்கைபோடு போடுகின்றன. இதே நிலை விரைவில் இந்தியாவிலும் ஏற்படும் என்பதே இசைத்துறையினரின் கணிப்பாகவும் உள்ளது.

தெற்காசிய நாடுகளில் தனியிசைப் பாடல்களை உருவாக்கும் பணியில் உள்ள தெற்காசிய சுயாதீன கலைஞர்களின்(South Asian Independent Artist) குரல்களை உலக அரங்கிற்கு  கொண்டு சேர்க்கும் விதமாக ஏஆர்.ரஹ்மான் “மாஜா” என்ற தளத்தை ஜனவரி 26ஆம் தேதி தொடங்கினார். 

“மாஜா” தளத்தின் முதல் பாடலாக ’ரவுடி பேபி’ உள்ளிட்ட பாடல்களைப் பாடிய தமிழ்ப் பாடகி  தீ, ராப் பாடகர் அறிவு ஆகியோர் பாடிய ’எஞ்சாய் எஞ்சாமி’ என்ற பாடல் கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்காக சென்னையில் நடத்தப்பட்ட வெளியீட்டு நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் பா.இரஞ்சித், மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்புராஜ், மணிகண்டன், நலன் குமாரசாமி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

இந்தப் பாடல் வெளியான மூன்றே நாளில் 30 லட்சம் பார்வையாளர்களை தாண்டி டிரெண்டிங்கில்  உள்ளது.

இந்தப் பாடலின் காட்சிகள், பாடல் வரிகள், ஆப்ரிக்க பாணியிலான இசை, தீ-யின் குரலில் ஒலிக்கும் ’குக்கூ குக்கூ’ என்ற வார்த்தைகள், இடையிடையே ஒலிக்கும் ராப் வரிகள், ஒப்பாரி வரிகள் ஆகியவை தனி அனுபவத்தைக் கொடுக்கின்றன. 

’நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ன குடுத்தானே பூர்வக்குடி’, ‘பாடுபட்ட மக்கா, வரப்பு மேட்டுக்காரா, வேர்வத்தண்ணி சொக்கா மினுக்கும் நாட்டுக்காரா’  போன்ற வரிகளை ரசிகர்கள் முனுமுத்தபடியே இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய முயற்சிக்கு இந்த பாடல் நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முன்பே டினிட்டஸ் குறித்து சொன்னார் அஜித்? நாமதான் கவனிக்கல

Admin

ஷூட்டிங் ஸ்பாட்ல சுகாதார சீர்கேடா.. நடிகர் ஆமீர்கான் விளக்கம்

Admin

அந்தரத்தில் தொங்கிய பூனையை காப்பாற்றிய கால்பந்தாட்ட ரசிகர்கள்.. வைரல் வீடியோ

Admin

பிக்பாஸ் நாட்கள்… நாள்: 11. கதைகளுக்கு லைக் பஞ்சம்….

இரா.மன்னர் மன்னன்

காவல் ஆணையருக்கு வீடியோ அனுப்பி தற்கொலை மீரட்டல் விடுத்த சூர்யா தேவி

Admin

தேர்தல் ஆதாயத்துக்காக வரலாற்றுப்பிழை செய்த பாஜக: எடப்பாடி பழனிசாமி காட்டம்

Pamban Mu Prasanth

ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் நெற்றிக்கண்!

Admin

விஜய் இந்த ஜாதி தான்… கோபத்தில் பள்ளியை மிரட்டிய எஸ்.ஏ.சந்திரசேகர்…

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள் 13: ”காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு…”

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள்… தொடக்க‌ நாள். யார் அந்த பங்கேற்பாளர்கள்?

ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள்: 18 “பஞ்சபூதங்களும் பஞ்சாயத்துகளும்”

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment