எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்… சபாநாயகர் அப்பாவு

SHARE

கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடர் ஜுன் 21 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு நடந்து வரும் பணிகளை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் எம்எல்ஏக்கள் அமரவைக்கப்படுவார்கள் என கூறினார். மேலும் கொரோனா பரிசோதனைக்கு பிறகே எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அப்பாவு தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகமே தாய்வீடு…ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்

Admin

விவசாயம்… ஆட்டோ… மைக்… நாதகவின் அடுத்த சின்னம் குறித்து சீமான் சொன்னது என்ன?

Admin

திடீரென்று முடங்கிய தமிழக அரசின் இ-பதிவு இணையதளம்!

Admin

பப்ஜி மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Admin

பேரிடர் ஆபத்தா? இந்த வாட்ஸப் எண்ணில் சொல்லுங்க… தமிழக அரசு அறிவிப்பு

Admin

ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

ரூ 2000 – கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை இன்று முதல் வழங்கப்படுகின்றது.

புதிய கல்விக் கொள்கை வேண்டாம்…. புறக்கணித்த தமிழக அரசு!

திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

Admin

குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை… புதிய டிஜிபி சைலேந்திரபாபு

Admin

தமிழுக்கு அகரமுதலி தந்த வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று… யார் இந்த வீரமாமுனிவர்?

இரா.மன்னர் மன்னன்

எம் ஜி ஆர் ஜெயலலிதா பெயர்களை தவிர வேறு யார் பெயரையும் கோஷமிட வேண்டாம் – ஓபிஎஸ் வேண்டுகோள்

Admin

Leave a Comment