குஷ்புவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது தொடர்பான விவரங்களை கேட்டு சென்னை சைபர் கிரைம் போலீசார் ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
கடந்த 20ம் தேதி டி.ஜி.பி சைலேந்திர பாபுவை சந்தித்து பாஜக நிர்வாகி குஷ்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தனது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தவறாது யாரும் பயன்படுத்த விடக்கூடாது, எனது ட்விட்டர் பக்கத்தை முடக்கியவர்கள் யார் என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி” புகாரில் குஷ்பு தெரிவித்துள்ளார்.
இந்த புகார் மனு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்மிற்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் குஷ்பு கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.