நீட் ஆய்வுக்குழு அமைத்தது செல்லும் :உயர்நீதிமன்றம் அதிரடி

SHARE

தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அரசு அமைத்த குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 9 பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு நியமித்தது. இதற்கான அரசாணை ஜூன் 10 ஆம் தேதி வெளியானது.

இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும் தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

அதில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கரு.நாகராஜன் அரசியல் பிரமுகர் என்ற அடிப்படையிலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடர்ந்திருப்பதாக தெரிவித்திருந்தது. இதனிடையே இந்த இரண்டு மனுக்களும் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அரசு அமைத்த குழு செல்லும். நீட் தேர்வு ஆய்வுக் குழு அமைத்தது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லை.

மேலும் மத்திய அரசு சட்டங்களுக்கு எதிரானதாகவும் நீட் ஆய்வுக் குழு அமைப்பு இல்லை எனவும் தெரிவித்து கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

மேலும், மக்கள் கருத்து கேட்பது தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா கட்டளை மையங்கள் – தொடர்பு எண்கள் வெளியாகின.

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

போலீசார் அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கக்கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

முதல்வரிடம் ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

ஏசி வசதியோடு இயங்கும் அரசு பள்ளி… தலைமை ஆசிரியையின் முயற்சிக்கு குவியும் பாராட்டு

Admin

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

திடீரென்று முடங்கிய தமிழக அரசின் இ-பதிவு இணையதளம்!

Admin

தனுஜாவை தொடர்ந்து போலீசாருடன் தகராறு செய்த மற்றொரு வழக்கறிஞர்!

Admin

தேர்தல் ஆதாயத்துக்காக வரலாற்றுப்பிழை செய்த பாஜக: எடப்பாடி பழனிசாமி காட்டம்

Pamban Mu Prasanth

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Admin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை டுவிட்டரில் புகழ்ந்த பவன் கல்யாண்.!!

Admin

Leave a Comment