”கை நழுவிய காதல்..!”. மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 2.

SHARE

இரண்டாவது சிகரெட்டை பற்றவைத்து இழுத்துக் கொண்டிருந்த புகழேந்தியை கடைக்கார இளைஞன் வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்…

அதைப்பற்றியெல்லாம் புகழேந்தி கவலைப் படவில்லை… கவலைப்பட்டு என்னவாகிவிடப் போகிறது…

சிகரெட்டின் புகை நுரையீரலைத் தொட்டு வெளியேறியது…

புகைத்தபடியே, தான் அமர்ந்துவிட்டு எழுந்து வந்த அந்த கடற்கரையை நோக்கினான்.

அவன் அமர்ந்த இடத்தில் இப்போது ஒரு காதல் ஜோடி அமர்ந்து கடலைப் பார்த்தபடி கடலை போட்டுக் கொண்டிருந்தது.

மறுபடியும் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

இன்று இவர்கள் அமர்ந்து இருக்கின்ற அதே இடத்தில்தான் நேற்று புகழேந்தி தன் காதலியுடன் அமர்ந்திருந்தான். இன்று அவள் அவனோடு இல்லை..

மறுபடியும் அவன் பழைய ஞாபகங்களுக்குள் மூழ்கினான்.

” வாட்… என்ன சொல்ற புகழ்..?” ஆவேசமாக பேசிய ராதிகாவை எப்படி சமாளிப்பது என தெரியாமல் விழித்த புகழேந்தி…

” ஆமா ராதிகா… டாக்டர் சொன்னதை முழுசா உன்கிட்ட சொல்லிட்டேன்… இதுக்கப்பறம் நீ தான் முடிவெடுக்கனும்…” என்றான்.

” இதுல முடிவெடுக்கறதுக்கு என்ன இருக்கு புகழ்..? உன்னால எதுவுமே முடியாதுனு ஒரு நிலைமை வந்ததுக்கு அப்பறம்.. என்னனு முடிவெடுக்க சொல்ற..?”

” உனக்கே தெரியும் ராதிகா… சின்ன வயசுலயே, பெத்தவங்க யாரும் இல்லாம அனாதையா ஆஸ்ரமத்துல வளர்ந்து இன்னைக்கு ஒரு நல்ல வேலையில இருக்கேன். எனக்கும் ஒரு குடும்பம் வேணும் ராதிகா… குழந்தை இல்லைனா என்ன..? ஒரு குழந்தைய தத்தெடுத்து கூட வளர்த்துக்கலாம்… நீ என் கூட இருக்கனும் ராதிகா… நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியாது… ” என கண்ணீர் மல்க கெஞ்சினான்.

” சும்மா பைத்தியம் மாதிரி பேசாத புகழ். வாய் வார்த்தைக்கு பேச நல்லாத்தான் இருக்கும். ஆனா நடைமுறைனு வர்றப்போ இது சுத்தமா செட் ஆகாது… நீ சொல்ற மாதிரி குழந்தை மட்டும் பிரச்சனை இல்ல… அதுக்கும் மேல எவ்வளவோ இருக்கு… அதெல்லாம் உனக்கு புரியுதா… இல்லையா..?” என கோவத்தோடு பேசினாள்.

” நீ சொல்றத பார்த்தா செக்ஸ் மட்டும்தான் வாழ்க்கையா..? இங்க செக்‌ஸ்க்காக மட்டும்தான் எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கிறாங்களா..? “

”செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்ல… செக்ஸ் இல்லாமலும் வாழ்க்கை இல்ல…”

” திருமண பந்தத்தை கேவலம் செக்ஸ் மட்டும்தான் நிர்ணயிக்குதுனு கொச்சை படுத்தாத ராதிகா.. இங்க எத்தனையோ தம்பதிகள் செக்ஸ் இல்லாம குடும்பம் நடத்திக்கிட்டுதான் இருக்காங்க.. அதுமாதிரி ஒரு தம்பதிகளா நாமளும் வாழலாம்… “

” எப்படி எப்படி தம்பதிகளாவா… லூசு மாதிரி பேசாத புகழ்… தாம்பத்தியம் இல்லாத தம்பதிகள் அவங்களை அவங்களே ஏமாத்திக்கிட்டு , ஒருத்தருக்கு தெரியாம இன்னொருத்தர் துரோகம்தான் பண்ணிகிட்டு இருப்பாங்க… சரி விஷயத்துக்கு நேரடியாவே வர்றேன். நாம கல்யாணம் பண்ணிக்கிறதா ஒரு பேச்சுக்கு வச்சுக்கலாம். நாளைக்கு நான் உனக்கு துரோகம் பண்ணமாட்டேனு என்ன நிச்சயம் இருக்கு… இதெல்லாம் சரிபட்டு வராது புகழ்… ” என்றாள் விரக்தியாக..

” நீ என்னோட ராதிகா… நீ துரோகம் பண்ண மாட்ட… எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு… உன்னை ஒரு நாளும், நான் சந்தேகப்பட மாட்டேன்…”

” நான் ஒன்னும் உணர்ச்சியே இல்லாத ஜடம் கிடையாது. நானும் ஒரு மனுஷிதான்… எனக்கும் ஆசை இருக்கு… உன்னோட பிரச்னைக்காக என் வாழ்க்கையை நாசமாக்க நான் விரும்பல.. என்னை மன்னிச்சுடு புகழ்… நீ நல்லவன்… உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியலையேங்கற வலி எனக்கும் இருக்கு… ஆனா, விதி… என்னால என்ன பண்ண முடியும்… என்னை மன்னிச்சுடு புகழ்… குட் பை… ” என்று கூறிவிட்டு அவனிடம் இருந்து விடைபெற்றாள்.

தன்னை உருகி உருகி காதலித்தவள். தன்னை உதாசீனம் செய்து விட்டு செல்வதை கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தான் புகழேந்தி..

இனி அவள் வரமாட்டாள். அவனுடைய ராதிகா அவனைப் புறந்தள்ளிவிட்டு ரொம்ப தூரம் சென்று விட்டாள்… அவள் மட்டுமல்ல, இனி யாரும் வரமாட்டார்கள்.

“சார்.. சார்..” என்ற சத்தம் கேட்டு கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு திரும்பினான்.

கையில் இருந்த சிகரெட் பாதி கரைந்திருந்தது. கடைக்காரன் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தான். தூரத்தில் கடற்கரை மணலில் காதலித்துக் கொண்டிருந்த காதலர்கள் இருந்த இடம் இப்போது காலியாக இருந்தது… சுற்றிலும் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.

“சார்… சார்…” என்ற குரல் மீண்டும் வந்தது.

குரல் வந்த திசையைப் பார்த்தான்.

ஒரு பெண் நின்றிருந்தாள்.

அவளை மேலும் கீழும் ஒருமுறை ஏற இறங்க பார்த்தான்.

கவலை நிரம்பிய கண்கள். சீவப்படாமல் காற்றில் பறந்த கூந்தல்… மாநிறமான முகம்… கையில் ஒரு பை… 30 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதாகத்தான் இருக்க வேண்டும் என அவளது உடல் சொல்லியது…

என்ன என்பது போல அவளைப் பார்த்தான்.

“சார் ஊருக்கு போகணும் கைல காசு இல்ல.. பஸ் சார்ஜ்க்கு பணம் இல்லாம ரெண்டு மூனு நாளா இங்கதான் அலைஞ்சுட்டு இருக்கேன்… கொஞ்சம் பஸ்ஸுக்கு போக பணம் கொடுத்து உதவுறிங்களா சார்…”

புகழேந்திக்கு கோபம் பற்றிக் கொண்டு வந்தது…


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

கொரோனா சிகிச்சை மையத்தில் தோசை சுட்ட அமைச்சர்!.

பிக்பாஸ் நாட்கள். நாள் 15: “கொளுத்திப் போட்ட பிரியங்கா!”

இரா.மன்னர் மன்னன்

ஆட்டை பலியிட்டு அபிஷேகம்… நடிகர் ரஜினி மீது போலீசில் புகார்

Admin

அமெரிக்காவில் 80% டெல்டா கொரோனா வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

பிக்பாஸ் நாட்கள்… நாள்: 11. கதைகளுக்கு லைக் பஞ்சம்….

இரா.மன்னர் மன்னன்

உயிர் பெறும் தமிழ் நாகரிகம் : அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிப்பு

Admin

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 6: தொழிற் கை முத்திரையின் வகைகள் (13 – 16)

வேளாண் பட்ஜெட் நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் – கமலஹாசன்

Admin

’காற்றோட கலந்தாலும் அதுதான் நம் அடையாளம்…’ – பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சங்ககாலக் கால்வாய் கண்டுபிடிப்பு

Admin

அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்.. தனி விமானத்தில் பயணிக்க மத்திய அரசு அனுமதி

Admin

அஞ்சிஅடிபணிவது தமிழர் பரம்பரைக்கே கிடையாது துணிந்து நில் தம்பி: விஜய்க்கு சீமான் அட்வைஸ்!

Admin

Leave a Comment