செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மோடி அரசு மும்முரமாக உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு முன்னதாக பாஜக தலைமை அறிவுறுத்தலின்படி, எடியூரப்பா, ராவத் ஆகியோர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதுகுறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக அரசு செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மும்முரமாக உள்ளது என குறிப்பிட்டார். அவர்கள் செயல்படாத முதல்வர்கள் என்பதை பாஜக தலைமை எப்போது உணர்ந்தது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் எடியூரப்பா, ராவத் மற்றும் ரூபானி பல மாதங்களாக செயல்படவில்லை என்பது அந்தெந்த மாநில மக்களுக்கு தெரியும் என குறிப்பிட்டார். அவர், மாற்ற வேண்டிய முதல்வர்கள் பட்டியல் ஹரியானா, கோவா, திரிபுரா என பட்டியல் இன்னும் நிறைய இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.