பிக்பாஸ் நாட்கள். நாள் 15: “கொளுத்திப் போட்ட பிரியங்கா!”

SHARE

“சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்” பாடலுடன் நாள் தொடங்கியது. அக்ஷரா வெளியில் இருந்த வருணிடம் மூவர் குழுவில் இருந்து வருண் தப்பித்தக் கதையையும், வருணுக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் கூறி, அவற்றை சரி செய்துக் கொள்ளுமாறும் சொன்னார்.

கிச்சனில் நேற்றைய சாப்பாடு கெட்டு போனதாக இமான் சொல்ல, நல்லா இருக்கு இப்போ சாப்டா ஓகே, கொஞ்ச நேரம் விட்டா கெட்டுப்போயிடும்னு சுருதி சொல்ல, இப்போ சாப்பிட முடியாதுனா, அந்த சாப்பாட்ட வடகம் போட்டுடலாம்ன்னு சுருதி முடிவு பண்ண, தாமரையும் சரி என்று கூறினர்.

அடுத்து பிக் பாஸ் இந்த வாரத்தின் தலைவர் போட்டிக்கு போட்டியிட, கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் சரியான நேரத்திற்கு வந்த ஹவுஸ்மேட்ஸ் மட்டுமே போட்டியிட முடியும் என்று கூறி அவர்கள் யார் என்றும் அறிவித்தார். ராஜூ, பாவ்னி, சிபி, இசை இந்த நால்வர் மட்டுமே இந்த வார தலைவர் போட்டிக்கு போட்டியிட தகுதி பெற்ற நபர்கள்.

அதற்கான‌ டாஸ்க், இந்த நால்வரும் வெளியில் தனித்தனியாக நிற்க, ஹவுஸ்மேட்ஸ் அவர்களை தொடாமல், அவர்களை ஏதேனும் ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்த வைக்க வேண்டும் என்பதுதான். இதில் முதலில் தோற்றவர் இசை, அடுத்து ராஜூ, கடைசியில் சிபி மற்றும் பாவ்னி இருக்க, அவர்களுக்கு மாலையிட்டு அதிகபட்ச வாக்கு எண்ணிக்கையில் நிற்பவர்தான் தலைவர் என்று கூறப்பட்டது. அதில் சிபி அதிக வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார்.

தலைவர் தேர்ந்தெடுத்த உடன், மற்ற அணிகளையும், சிபி அழகாக பிரித்து, சமைக்க தெரியாதவர்களை கத்துக்கோ என்று கிச்சன் டீமில் போட்டது, செய்த வேலையையே மறுபடியும் பண்னாதீங்க என்று கூறி வேலைகளை மாற்றி கொடுத்தது, காணாமல் போனவர்கள் என்று அடிப்பட்ட பெயர்களை கேப்டனாக நியமித்தது என்று வீட்டை நானும் கவனிக்கிறேன் என்று நடந்துக் கொண்டது பாராட்டக்குறியது.

அடுத்து, வாங்க நாமினேஷனுக்கு என்று ஒவ்வொருவரையும் அழைத்தார் பிக் பாஸ். இதில் நாமினேட் செய்யப்பட்டவர்கள், அபிஷேக், பாவ்னி, அக்ஷரா, சின்னப்பொண்ணு, பிரியங்கா, தாமரை, ஐக்கி, இசைவாணி, அபினய் ஆகியோர்.

பிரியங்கா, நிரூப், அபிஷேக் யார் யாரை நாமினேட் செய்தோம் என்று அவர்களுக்குள் பேசிக்கொள்ள, அபிஷேக் ராஜூ விடமும் கேட்க, அதெல்லாம் சொல்லக்கூடாது என்று ஓடிவிட்டார் ராஜூ. அடுத்து ராஜுவும் வருணும் பாவ்னியை பற்றி வெளியில் சோபாவில் பேசிக்கொண்டிருந்தனர்.

பாவ்னி கிச்சன் டீமில் இருந்த போது சாப்பாடு பற்றாக்குறை, கவனிப்பு போன்ற குறைகளை பற்றி பேசினர். இதை மற்ற ஹவுஸ்மேட்ஸும் அரசல் புரசலாக பேசினர். இடையில் கிச்சன் டீமில் இருக்கும் மற்ற யாருமே சமையல் செய்யவில்லை என்றும், பாவ்னி மற்றவரிடம் கூறிக்கொண்டிருந்தார். பிறகு ராஜூவும் பாவ்னியும் நேரடியாக பேசினர். ஆனால் வழக்கம்போல் பாவ்னி தவறாக புரிந்துக்கொண்டு இடத்தை விட்டு கிளம்பிவிட்டார்.

பாவ்னியை இன்னும் வெறுப்பேற்றும் விதமாக, ராஜு போன வாரம் கிச்சன் டீமில் நன்றாக வேலை செய்ததை பாராட்டிய‌ பிரியங்கா, அபிஷேக் ராஜூவிற்கு பாயாசம் செய்து ஊட்டி விட, ராஜூவும், இது என்னை ப்ரோமொஷன் பண்றதுக்கா, இல்ல க்ளோஸ் பண்றதுக்கா என்று சிரித்தார். ஆனா சும்மா சொல்லக்கூடாது பிரியங்கா நல்லாவே கொளுத்திப் போடுறீங்க…


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் நாட்கள். நாள்: 7 குட்டையை குழப்பிவிட்ட கமல்…

இரா.மன்னர் மன்னன்

நம்பர் லாக் போட்டு வீட்டை திறக்கும் பூனை.. வைரல் வீடியோ

Admin

சீமான் எல்லாம் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள் – 19. “காசைத் திருடினாலும் சலுகை!”

இரா.மன்னர் மன்னன்

தள்ளி போகாதே என்னையும்…. நண்பனை பிரிய மனமில்லாமல் துரத்தி ஓடும் நாய்

Admin

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

Admin

மோடி ஆட்சிக்கு ஒரு கோடி கும்பிடு… வைரலாகும் புகைப்படங்கள்…

Admin

மிரட்டும் காளை .. ட்ரெண்டிங்கில் கலக்கும் வாடிவாசல்!

Admin

பிக்பாஸ் நாட்கள்… முதல் நாள். யாருக்கு என்ன வேலை?

ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போன “இல்லாத” சிற்பம்… வடிவேலு பாணியில் நடைபெற்ற சம்பவம்…

Admin

முதல் குவாலிபையர் போட்டி… சி.எஸ்.கே.வில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்னென்ன?

இரா.மன்னர் மன்னன்

காரை வாங்கிய ஆர்வத்தில் கீழே விழுந்த சோகம்- வைரலாகும் வீடியோ!

Admin

Leave a Comment