டெல்டா பிளஸ் வைரஸ்… தமிழக அரசுக்கு மத்தியஅரசு கடிதம்

SHARE

இந்தியாவின் பல மாநிலங்களில் உருமாறியுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்தியஅரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், டெல்டா பிளஸ் வகை வைரஸ் நுரையீரலை கடுமையாக பாதிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டது. எனவே கொரோனா மேலும் பரவாமல் தடுக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தீவிர பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அந்த கடிதத்தில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பங்குச் சந்தையில் கால் பதிக்கிறது ஜொமோட்டோ..!!

Admin

தாத்தா பிறந்தநாளில் இறந்த பேரன்… சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Admin

கொரோனா 3ம் அலை வருமா என தெரியாது :எய்ம்ஸ் தகவல்!

Admin

இறுதிச் சடங்கிற்கு ரூ.15,000 உதவி: ஆந்திர அரசு அறிவிப்பு

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா..? எய்ம்ஸ் தலைமை மருத்துவர் விளக்கம்

Admin

பயந்தவங்க காங்கிரஸிலிருந்து வெளியேறலாம் – ராகுல் காந்தி

Admin

கோவாக்சின் 2ஆம் தவணைக்கு உடனே பதிவு செய்யவும்!

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அழைப்பு

Admin

டெல்லி அரசின் புதிய திட்டத்தில் நடிகர் சோனு சூட்…!!!

Admin

ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு செபி ரூ.3 லட்சம் அபராதம்..!!

Admin

ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்பு வரலாம்!: சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை!.

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் தூக்கி வந்த மருமகள்!.

Leave a Comment