தலைவரும் நானே… பொதுச் செயலாளரும் நானே… மநீம கட்சியில் மாற்றங்களை அறிவித்த கமல்!

SHARE

மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, , மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தத் தேவையான மாற்றங்களைச் செய்வேன் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று நடந்த இணையவழிக் கலந்துரையாடலில் கமல்ஹாசன் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

கட்சி உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், நமது கொள்கைகளை, செயல் திட்டங்களை செயல்படுத்த புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளேன்.

மேலும், கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாகக் கட்சியின் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பினையும் ஏற்றுப் பணியாற்ற இருக்கிறேன்.

புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று மாநிலச் செயலாளர்கள், நிர்வாகக் குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சில அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் வெளியாகும்.

புதிய மாநிலச் செயலாளர்கள் ஏற்கெனவே நமது கட்சியின் வேட்பாளர்களாகக் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்டவர்கள்தான். எனினும், அவர்களைப் பற்றி மீண்டும் இங்கே குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன்.

சிவ.இளங்கோ சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் நிறுவனர். மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அநீதிகளுக்கு எதிராகச் சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்த காரணத்தால் ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டு சிறை சென்றவர்.

செந்தில் ஆறுமுகம் தகவல் தொழில்நுட்பத் துறையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு சமூகப் பணி செய்ய வேண்டும் என்ற தனது லட்சியத்திற்காக பணியை ராஜினாமா செய்தவர்.

நேர்மையான அரசியலின் மூலம் நல்லாட்சி’ மலர வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 20 ஆண்டுகளாக உழைத்து வருபவர். சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்துவது என மக்கள் நலன் சார்ந்து தொடர்ந்து இயங்கி வருகிறார்.

சரத்பாபு தன் கடின உழைப்பாலும், திறமையாலும் வெற்றிகரமான தொழில்முனைவோராகத் திகழ்பவர். ஃபுட் கிங் அறக்கட்டளையை நிறுவி பசியோடு இருப்பவர்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார்.

புதிய நியமனங்கள்:

1. பழ.கருப்பையா – அரசியல் ஆலோசகர்
2. பொன்ராஜ் வெள்ளைச்சாமி – அரசியல் ஆலோசகர்
3. ஏ.ஜி.மெளரியா – துணைத் தலைவர் – கட்டமைப்பு
4. தங்கவேலு – துணைத் தலைவர் – களப்பணி மற்றும் செயல்படுத்துதல்
5. செந்தில் ஆறுமுகம் – மாநிலச் செயலாளர் – தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு
6. சிவ.இளங்கோ – மாநிலச் செயலாளர் – கட்டமைப்பு
7. சரத்பாபு – மாநிலச் செயலாளர் – தலைமை நிலையம்
8. ஸ்ரீப்ரியா சேதுபதி – நிர்வாகக் குழு உறுப்பினர்
9. ஜி.நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்

மக்கள் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட தலைமைப் பண்புமிக்க இவர்களை என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்தி வரவேற்பு செய்யுங்கள்.

முழு ஒத்துழைப்பை நல்குங்கள். இவர்கள் உங்களோடு சேர்ந்து உழைத்துக் கட்சியினை வலுவாக்குவார்கள். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும் என கமல்ஹாசன் பேசினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அர்ச்சகர் நியமனம் தொடர்பாக அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

Admin

மன்னிச்சுடுங்கள் அடுத்தமுறை கப் நமக்கு தான்: தமிழக ஒலிம்பிக் வீராங்கனை உருக்கம்!

Admin

வாரத்தில் 5 நாட்களுக்கு திரையரங்குகளை திறக்க மாநில அரசு அனுமதி

Admin

அஞ்சிஅடிபணிவது தமிழர் பரம்பரைக்கே கிடையாது துணிந்து நில் தம்பி: விஜய்க்கு சீமான் அட்வைஸ்!

Admin

எலான் மஸ்க் செய்த வேலையால் தமிழக நிறுவனத்திற்கு ரூ. 7 கோடி லாபம்?

Admin

விவசாயம்… ஆட்டோ… மைக்… நாதகவின் அடுத்த சின்னம் குறித்து சீமான் சொன்னது என்ன?

Admin

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது காரணம் என்ன?

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

ஒரே உதவி எண்: ரயில்வே அறிவிப்பு!

Admin

சிம்பன்சியைக் காதலிக்கும் பெண்!. காதலைப் பிரிக்கும் மிருகக் காட்சி சாலை – விநோத காதல் கதை..!

Admin

உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள். ஆட்டிசம் என்றால் என்ன?.

Admin

போதை பொருள் கடத்திய திமுக நிர்வாகி நீக்கம் – யார் இந்த ஜாபர் சாதிக்?

Pamban Mu Prasanth

Leave a Comment