பிரான்ஸில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், “பிரான்ஸில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு சிறப்பாகச் செயல்பட்டதன் விளைவாக நாட்டில் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரான்ஸில் தொற்று காரணமான, பலி எண்ணிக்கை குறைந்துள்ளதால் பொது இடங்களில் மக்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மதுபான விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன – எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கெளசல்யா அருண்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்