அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா குறித்த புள்ளி விவரங்களை ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது.
அதன்படி , கொரோனா தொற்று செப்டம்பரில் மேலும் உருமாற்றம் அடைந்தால் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடையே மூன்றாம் அலை தீவிரமடையும என்றும், ஆனால் இதன் தீவிரம் இரண்டாம் அலையை போல கடுமையான பாதிப்பை ஏற்படுத்ததாது என்றும் தெரியவந்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலையை விட குறைவாகவே பாதிப்பு இருக்கும் என ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் குழுவிலிருக்கு மகேந்திரா அகர்வால் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்