இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

SHARE

இஸ்ரேலைப் பூர்வீகமாகக் கொண்ட ஹாலிவுட் நடிகை கல் கதோட் டுவிட்டரில் போர் குறித்து வெளியிட்ட பதிவால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

பாலஸ்தின் மீதான இஸ்ரேலின் விரோதப் போக்கு உலகம் அறிந்ததே. பாலஸ்தீன் நாட்டின் பள்ளிக் கூடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. படிப்படியாக பாலஸ்தீனத்தின் பகுதிகளை இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமித்தும் வருகிறது. சமீபத்தில் இரு நாடுகளும் மேற்கொண்ட தாக்குதல்களில் 6 இஸ்ரேலியர்களும், 65 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் ஹாலிவுட் படங்களில் நடித்துவரும் நடிகையும், இஸ்ரேலிய மாடல் அழகியும், முன்னர் இரண்டு ஆண்டுகள் இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் பணியாற்றியவருமான கல் கதோட், இந்தப் போர் குறித்து டுவிட்டரில் நீண்ட பதிவொன்றைக் கடந்த மே 12 அன்று வெளியிட்டார். அதில்,

’எனது தாய்நாடா இஸ்ரேல் சுதந்திரமாக, பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பது என் விருப்பம். அதே நேரம் நமது அண்டை நாடுகளுக்கும் அப்படி வாழ உரிமை உண்டு. பாதிக்கப்பட்ட மக்களுக்காக நான் இறைவனை வேண்டுகிறேன். விரோதப் போக்கு முடிவடைய வேண்டும், இதற்கு தலைவர்கள் ஒரு தீர்வைக் காண வேண்டும் என்றும் நான் வேண்டிக் கொள்கிறேன்’ – என்று அவர் கூறி இருந்தார்.

இது டுவிட்டரில் கடும் விமர்சனங்களைப் பெற்றது. பாலஸ்தீன் நாட்டின் நிலங்களை இஸ்ரேல் முறைகேடாக அபகரிப்பதை ஒரு இரு தரப்புப் போர் போல கல் கதோட் சித்தரிக்க முயல்வதாகவும், அவருக்கு தனது தாய் நாடு செய்யும் தவறை சுட்டிக் காட்டும் தைரியம் இல்லை எனவும் டுவிட்டர்வாசிகள் விமர்சித்து வருகின்றனர். இதனால் அவர் கமெண்ட் ஆப்ஷனை நிறுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

அரிதாக சிலர், ‘கல் கதோட் இரு தரப்பு அமைதிக்காக பிரார்த்தனை செய்கிறார். இதனை விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டாம்’ – என்றும் கூறி வருகின்றனர். மார்வல் நிறுவனத்தின் வொண்டர் வுமன் வரிசைப் படங்களில் நடித்ததால் புகழ் பெற்றவர் கல் கதோட் என்பது குறிப்பிடத் தக்கது.

– நமது நிருபர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பொய் பேசும் நரையெல்லாம் மை பூசி மாத்திக்கோ… 100வது வயதை எட்டிய 3 மூதாட்டிகள் கேக் வெட்டி கொண்டாட்டம்..!!

Admin

பாசிச போக்கு… ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவுக்கு உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு!

Admin

காந்தியின் கோட்பாடுகள்தான் இந்தியாவை சுதந்திரத்தை நோக்கி வழிநடத்தின: ஜோ பைடன்

Admin

தனுஷால் கெத்து காட்டிய “வேலை இல்லா பட்டதாரி”கள்…டிவிட்டரில் கொண்டாட்டம்

Admin

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்… திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்…

Admin

அமேசான் சி.இ.ஓ. பொறுப்பில் இருந்து ஜெப் ஃபெசோஸ் விலகல்.. இதுதான் காரணமா.?

Admin

எது கிருத்திகா உதயநிதிக்கு ஜாபர் சாதிக் தயாரிப்பாளரா? – மெய்யெழுத்து FactCheck

Pamban Mu Prasanth

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர்.. ஜெர்மனியில் டெலிவரி பாய்.!!

Admin

ராணி எலிசபெத்தை கொல்ல விரும்பிய பயங்கரவாதி சுட்டுக்கொலை

Admin

வெளியானது சீயான் 60 படத்தின் புதிய போஸ்டர் !

Admin

அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொலை… ஆதாரம் கொடுத்த இளம்பெண்ணுக்கு உலகின் உயரிய ஊடக விருது!.

Admin

தலிபான்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கம்!

Admin

Leave a Comment