மனி ஹெய்ஸ்ட் வெப் தொடர் – அடுத்த சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

SHARE

இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற மனி ஹெய்ஸ்ட் வெப் தொடரின் அடுத்த சீசன் ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்பட்டது.

கொரோனா முடக்கத்தால் வீட்டிற்குள் அடைந்து கிடந்தவர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்காக அமைந்திருந்தவை வெப் தொடர்கள்தான். கொரோனா முடக்கத்தின் போது திரையரங்குகளும் திறக்கப்படாததால் மக்கள் பலரும் பழைய திரைப்படங்களையும், அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார் போன்ற பல்வேறு ஓ.டி.டி. தளங்களையும் பார்வையிட்டனர். இதனால் இந்திய அளவில்  ஓ.டி.டி. தளங்களில் வெப் தொடர்களைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்தது.

இதில் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்நெட் பிளிக்ஸ்-சில் வெளியான மனி ஹெய்ஸ்ட். அடிப்படையில் இது ஒரு ஸ்பானிஷ் வெப் தொடர். அதிபுத்திசாலியான கொள்ளையன், ஒரு பெரிய வங்கியை கொள்ளையடிப்பதுதான் இதன் ஒருவரிக் கதை. 

ஏற்கனவே பார்த்து சலித்த ஒருவரிக் கதைதான் என்றாலும், கதை சொல்லும் விதம், காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு, அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வம், த்ரில், எதிர்பாராத திருப்பங்கள் என்று பார்ப்பவர்களை எழவிடாமல் ஆச்சர்யம் அடைய வைத்தது மனி ஹெய்ஸ்ட். 

இந்த வெப் தொடரை சாமானிய மக்கள் மட்டுமல்ல பிரபலங்களும் ஆர்வமாக பார்த்தனர். பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த மாதிரியான படங்களில நடிக்க ஆசையாக இருப்பதாகவும், மனி ஹெய்ஸ்ட்-டில் அந்த புரபசர்  கதாபாத்திரத்தில்தான் நடிக்க விரும்புவதாகவும் பதிவிட்டிருந்தார்.   

இந்த வெப் தொடரைத் தமிழில் எடுத்தால் எந்த எந்த தமிழ் நடிகர்கள் பொருத்தமாக இருப்பார்கள்? – என்று தமிழ் திரைப்பட நடிகர்களின் புகைப்படங்களை காட்டி ஒரு இயக்குனரை கேட்டதற்கு, புரபசர் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய்யும், தமாயு கதாப்பாத்திரத்திற்கு நடிகர் மகேஷ் பாபுவும், மொஹதான் கதாப்பாத்திரத்திற்கு நடிகர் அஜீத்தும், பெர்லினாக  ஷாருக்கானும், டென்வராக ரன்வீர்சிங்கும், சரியான தேர்வாக இருப்பார்கள் என்று அவர் கூறினார்.  இதுவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதுவரை  மனி ஹெய்ஸ்ட் தொடரின் நான்கு சீசன்கள் எடுக்கப்பட்டு இருந்த நிலையில் கொரொனாவால் அடுத்த சீசன் தள்ளிப் போனது.. 

ஒரு புத்தகத்தில் கடைசி சில பக்கங்களுக்காக காத்திருப்பது போல் இந்த வெப் தொடரின் கடைசி சீசனுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், அவர்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் விதமாக வரும் ஜீலை 31 அன்று அடுத்த சீசன் வெளியிடப்படும் என்று  மனி ஹெய்ஸ்ட் குழுவினர் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இது அந்தத் தொடரின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ரொம்ப தப்பு பண்ணுறீ ங்க… ஆப்கனில் இருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள்: ஜார்ஜ் புஷ் கண்டனம்

Admin

முட்டாள்தனமான கருத்தை நான் சொன்னதே கிடையாது: இம்ரான் கான்

Admin

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல… நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை கருத்து

Admin

“நாங்க வேற மாதிரி” – வலிமை பாட்டை கொண்டாடும் ரசிகர்கள்

Admin

அன்பென்றாலே அம்மா தாய்போல் ஆகிடுமா: இடிபாடுகளில் சிக்கிய குழந்தையினை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தாய் !

Admin

சார்ஜர் இல்லை: ஆப்பிள் நிறுவனத்துக்கு 20 லட்சம் டாலர் அபராதம் விதித்த பிரேசில்!.

Admin

மனித ரத்தத்திலும் நுழைந்த பிளாஸ்டிக்! – உலகை உலுக்கிய ஆய்வு முடிவு!

யுவன் பிறந்தநாள் கொண்டாட்டம்… பாடல் பாடி அசத்திய சிம்பு, தனுஷ்..

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

கிருத்திகா உதயநிதியுடன் இணையும் காளிதாஸ்… நெக்ஸ்ட் மூவி அப்டேட் இதோ

Admin

இயல்புக்கு நிலைக்குத் திரும்பிய பிரான்ஸ்

வடக்கு கூட்டணி படையினருடனான சண்டையில் 350 தாலிபான்கள் பலி?

Admin

Leave a Comment