நாளை மார்ச் 16ஆம் தேதி இந்தியாவுக்கான மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இரண்டு தேர்தல் ஆணையர்கள் அடுத்தடுத்து பதவி விலகிய நிலையில், அவசரகதியில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, இரண்டு அதிகாரிகள் தலைமை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் அத்துடன் தமிழ்நாட்டின் விளவங்கோடு உள்ளிட்ட காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கிடையில் 18000 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேர்தல் ஆணையர்கள் பதவியேற்ற மறுநாளே தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் 7 அல்லது கட்டங்களாக இந்த தேர்தல் நடத்தப்படலாம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.