தேர்தல் ஆதாயத்துக்காக வரலாற்றுப்பிழை செய்த பாஜக: எடப்பாடி பழனிசாமி காட்டம்

SHARE

சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படுவதாக அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிடப்பட்டதையடுத்து பொதுமக்கள் உட்பட அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் தங்கள் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், அண்மையில் கூட்டணி முறிவை அறிவித்த அதிமுக, தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, “பொதுத்தேர்தல் அறிவிக்கை வெளியாகும் சூழலில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, சிஏஏ சட்டம் 2019 (குடியுரிமை திருத்தச் சட்டம்) இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த சட்டத்தால் நாட்டில் உள்ள பூர்வகுடி மக்களாக உள்ள எந்த சமூகத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றே அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இந்த சட்டம் அம்லபடுத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்வரும் தேர்தலை கருத்தில்கொண்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆதாயத்துக்காக சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

மக்களை பிளவுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. இதன் மூலம் மாபெரும் வரலாற்று பிழையை மத்திய அரசு செய்துள்ளது.

அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டம் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த சிஏஏ திருத்தச் சட்டத்தை பூர்வ குடிமக்களான இஸ்லாமியர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால் அதிமுக அதனை ஒருபோதும் அனுமதிக்காதுஅகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டம் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த சிஏஏ திருத்தச் சட்டத்தை பூர்வ குடிமக்களான இஸ்லாமியர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால் அதிமுக அதனை ஒருபோதும் அனுமதிக்காதுகொள்கிறேன்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் ஒரேநாளில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று – 236 பேர் உயிரிழப்பு

Admin

விரைவில் “டிஜிட்டல் ரூபாய்”: ஆர்வம் காட்டும் ரிசர்வ் வங்கி

Admin

எம்.எல்.ஏ.வா இருந்தா எனக்கென்ன? – கழிவு நீரில் நடக்க வைத்த மக்கள்

Admin

தடுப்பூசியை வீணாக்காதீர்கள்: பிரதமர் மோடி அறிவுரை!

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்!

Admin

சைக்கிளில் சென்று வாக்களித்த நடிகர் விஜய்..! வைரலாகும் வீடியோ…

ராஜீவ்காந்தி விருதை மாற்றியது அரசியல் காழ்ப்புணர்ச்சி: காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

Admin

வாள் ஏந்தி நின்னான் பாரு…மிரட்டலாக வெளிவந்த சூர்யாவின் புது பட அப்டேட்!

Admin

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவச உணவு – அமைச்சர் அறிவிப்பு

நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும்:அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Admin

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

“வேளாண் பட்ஜெட் இப்படித்தான் இருக்கும்” – அமைச்சர் விளக்கம்

Admin

Leave a Comment