நாகாலாந்து ஆளுநராகப் பணியாற்றிவரும் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்
தமிழகத்தின் புதிய ஆளுநராக கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திர நாராயண ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.
உளவுத்துறை சிறப்பு இயக்குநர், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் ஆர்.என்.ரவி பணியாற்றியுள்ளார்.
பீகாரை சேர்ந்த இவர் காவல் துறை அதிகாரி மற்றும் இந்திய உளவுத்தறையின் முன்னாள் சிறப்பு இயக்குனர். நாகலாந்து கிளர்ச்சியாளர்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமானவர் .
. ஆர்.என். ரவி 1976 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இவர் பதவி வகித்துள்ளார். உளவுத் துறையின் சிறப்பு இயக்குனராகவும் பணியாற்றிய அனுபவம் ஆர்.என். ரவிக்கு உண்டு.
தற்போது தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் ஆர்.என்.ரவி .