விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இவர், அண்மையில் விசிக நடத்திய மாநாட்டில் உறுப்பினராக இணைத்துக்கொண்டவர். மாநாட்டுக்கு பின்னணியில் மூளையாக செயல்பட்டதோடு ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட மாற்றங்களையும் ஏற்படுத்தியவர்.
அதே மாநாட்டு மேடையில், துணை பொதுசெயலாளராகவும் அறிவிக்கப்பட்டார். இவருக்காகத்தான் விசிக பொதுத்தொகுதி கேட்கிறது என்றும் அரசியல் பார்வையாளார்கள் யூகங்கள் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் , நேற்று (08.03.2024) விசிகவுக்கு இரண்டு தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டு முடிவானது.
கொள்கை ரீதியிலாக, தொகுதிகளை பகிர்ந்து கொண்டோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோதும், ஆதவ் அர்ஜுனாவுக்கு சீட் கிடைக்காது என்பது உறுதியானது.
இந்த நிலையில்தான், ஆதவ் அர்ஜுனாவின் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
மேலதிக விவரங்கள் விரைவில்