பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா தப்பியோட்டம்!

SHARE

பாலியல் புகாரில் சிக்கி சர்ச்சையான சிவசங்கர் பாபா கைதாக இருந்த நிலையில் உத்தராகண்ட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு வழக்கானது சி.பி.சி.ஐ.டி வசம் சென்றது

இந்த நிலையில்உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று டேராடூன் விரைந்தனர்.

ஆனால், இன்று காலை சிபிசிஐடி போலீசார் டேராடூனில் உள்ள மருத்துவமனைக்கு சென்றபோது சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருக்க சிபிசிஐடி போலீசார் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆகவே சிவசங்கர் பாபா தனக்கு சொந்தமான ஆசிரமங்களில் மறைந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மதுரை எய்ம்ஸ் அமையவுள்ள பகுதியில் ரயில் சேவை

Admin

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் எதற்கு : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Admin

நடிகர் ஆர்யா மோசடி செய்யவில்லை… ஜெர்மனி பெண் விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் விளக்கம்..

Admin

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

மீண்டும் மீண்டும் சர்ச்சை: என்னதான் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி?

Pamban Mu Prasanth

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு” – கமல்ஹாசனை வச்சு செய்த வானதி சீனிவாசன்

Admin

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பா? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

Admin

இன்று முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!!

Admin

அன்போடு பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி – மூதாட்டியின் நெகிழ்ச்சி கடிதம்

Admin

சிவசங்கர் பாபாவின் இ-மெயில் முடக்கம்… சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை…

Admin

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment