வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்.!!

SHARE

தமிழக சட்டப்பேரவையில் புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூடியது. இந்த சட்டப்பேரவையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இதனையடுத்து, தீர்மானம் மீது பேசிய அவர், நமது நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கு மத்திய அரசின் 3 சட்டங்களும் ஏற்றதாக இல்லை என கூறியுள்ளார்.

விளை பொருட்களை வாங்கும் தனியார்களுக்கே வேளாண் சட்டங்கள் சாதகமாக உள்ளது என்றும், மாநில விவசாயிகளுக்கு பயனில்லாத அந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆட்சியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாகவும் அறிவித்தார்.

வேளாண் சட்டங்களால் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றி தருமாறு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

எனக்கு எதுவும் தெரியாது சார்….. காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் புகார்

Admin

கீழடி அகழாய்வில் 2000 ஆண்டுகள் பழமையான நாணயம் கண்டெடுப்பு..!!

Admin

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவச உணவு – அமைச்சர் அறிவிப்பு

சென்னை ஏடிஎம்களில் நூதன கொள்ளை… ஹரியானாவில் ஒருவர் கைது

Admin

ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது: அமித் ஷா பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்

Nagappan

திமுகவிற்கு மன உறுதி இல்லை போல.. பா.ஜ .க துணைத்தலைவர் கே.அண்ணாமலை!

Admin

சூழலியல் பாதுகாப்பை கவனத்தில் வைத்த முதல்வருக்கு நன்றி:கனிமொழி எம்.பி. ட்வீட்!

Admin

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் திடீர் டெல்லி பயணம்..!!

Admin

தவறாகப் பரப்பப்படுகிறதா… சீமான் பேசியது என்ன?

Admin

அற்புதம் அம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்? கமல்ஹாசன்!

Admin

கொங்குநாடு எதற்கு? நடிகர் வடிவேலு எதிர்ப்பு

Admin

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூடுங்கள்- தமிழக அரசு

Admin

Leave a Comment