ஆப்கானில் நேற்று காபூல் விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டுதாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் தங்களின் கண்டணத்தை தெரிவித்து வருகின்றன.
நேற்று இந்த குண்டுவெடிப்பில் ஆப்கானிஸ்தானிலிருந்த அமெரிக்கப் படைகளைச் சேர்ந்த 13 கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெடிகுண்டு தாக்குதல் குறித்து காட்டமாகப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்:
இந்தத் தாக்குதலை யார் முன்னின்று நடத்தினார்களோ, யார் அமெரிக்கா பாதிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்களோ அவர்கள் இதனை தெரிந்துகொள்ளவேண்டும்.
நாங்கள் இதை மன்னிக்க மாட்டோம். நாங்கள் இதை மறக்க மாட்டோம். நாங்கள் உங்களை வேட்டையாடுவோம். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்கள் மற்றும் நட்பு நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணி தொடரும் என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்