ஆப்கானிஸ்தானில் சிக்கி உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள், மீட்பு பணிகளில் இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஆப்கானில் தாலிபன்கள் ஆக்கிரமித்துள்ளதால் அங்கு உள்ள மக்கள் வெளியேறிவருகின்றனர்,இந்த நிலையில் இந்திய வெளியுறைவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி வெளியிட்ட செய்தி குறிப்பில்:
ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியர்களை மீட்பதில் இந்திய வெளியுறவுத்துறை தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அவர்களை மீட்பதே எங்களின் முதல் குறிக்கோள்.
முக்கியமாக ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கும் சீக்கியர்கள், இந்துக்களை மீட்க முக்கியத்துவம் தரப்படும். இப்போது பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து தொடங்கியதும் இவர்கள் மீட்கப்படுவார்கள்.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் நபர்களுக்கு அதற்கான வசதி ஏற்படுத்தி தரப்படும்.
இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நான் கவனமாக இருக்கிறோம் ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்களுடன் பேசி வருவதாக தெரிவித்துள்ளார்.