120 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டியது இந்தியா!

SHARE

இந்தியா இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா இங்கிலாந் இடையே கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய முதல் போட்டியில் இந்திய அணி 364 ரன்களும், இங்கிலாந்து 391 ரன்களும் எடுத்தன

பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

இதனால் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 272 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 60 ஓவர்களில் இந்த ரன்னை எட்ட வேண்டும் என்பதால் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் ரன் எடுக்க ஆசைப்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

51.5 ஓவர்களில் அந்த அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட், பும்ரா 3 விக்கெட், இஷாந்த் 2 விக்கெட், ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்குகிறது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தவன் அதிரடி! – பஞ்சாப்பை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி!.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக நியூசிலாந்து வீரர் செய்த செயல்

Admin

முதல் குவாலிபையர் போட்டி… சி.எஸ்.கே.வில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்னென்ன?

இரா.மன்னர் மன்னன்

‘இந்திய அணியில் மீண்டும் தோனி’ – டி20 உலக்கோப்பைக்கான வீரர்கள் அறிவிப்பு

Admin

நம்ம வீரர்கள் கொஞ்சம் பயந்துதான் போயிட்டாங்க: தினேஷ் கார்த்திக் விளக்கம்

Admin

டோக்கியோ ஒலிம்பிக்கில் அதிரடி…வில்வித்தையில் இந்தியா அசத்தல் வெற்றி

Admin

கண்ணீருடன் விடைபெற்ற லியோனல் மெஸ்சி – வைரலாகும் வீடியோ!

Admin

தோனியை தொடர்ந்து உருவாகிறது “கங்குலியின் பயோபிக்” – ரசிகர்கள் உற்சாகம்

Admin

வெற்றி பெற்றது டெல்லி அணி… பட்டியலில் இரண்டாம் இடம்.

வீணான இஷான் கிஷனின் சாதனை. வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்…

இந்தியாவில் விளையாட்டு மாறவேண்டும் – தங்க மகன் நீரஜ் சோப்ரா ஆதங்கம்!.

இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர் திடீர் ஒத்திவைப்பு

Admin

Leave a Comment