செல்போனை முழுங்கிய இளைஞர்… சாமர்த்தியமாக காப்பாற்றிய மருத்துவர்கள்

SHARE

கொசோவோ நாட்டில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் செல்போன் அகற்றப்பட்டுள்ளது.

கொசோவோ நாட்டின் பிரிஸ்டினா பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞர் ஒருவர் அங்குள்ள அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்று தான் செல்போனை வாயின் அருகே வைத்து பேசிக் கொண்டிருந்தபோது தவறுதலாக விழுங்கியதாக தெரிவித்துள்ளார்.

அவரின் பேச்சைக் கேட்டு அதிர்ந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அதனை அகற்ற முடிவு செய்தனர். உடனே அவருக்கு எக்ஸ்ரே மற்றும் எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொண்டு வயிற்றில் செல்போன் இருக்கும் இடம் துல்லியமாக கண்டறியப்பட்டது.

அதேசமயம் வயிற்றுக்குள் சென்ற செல்போனின் பேட்டரி மற்றும் பிற பாகங்கள் தனியாக பிரிந்தும் கிடந்தது தெரிய வந்தது. கிட்டதட்ட 2 மணி நேரம் போராடி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்த செல்போன் அகற்றப்பட்டது.

இதுகுறித்து மருத்துவர் டெல்ஜாகு தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியே எடுக்கப்பட்ட செல்போனின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும் பேட்டரி மனிதனின் வயிற்றில் வெடிக்கக் கூடும் என்பதால் இந்த அறுவைச் சிகிச்சை தங்களுக்கு மிக கடினமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நபர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் விரைவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நடக்க முடியாத மகனுக்காக தந்தை உருவாக்கிய ரோபோ உடை

Admin

கொரோனா தடுப்பூசி எடுக்கலைனா கைது தான் .. எச்சரிக்கும் அதிபர் எங்கு தெரியுமா?

Admin

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர்.. ஜெர்மனியில் டெலிவரி பாய்.!!

Admin

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா : பதட்டத்தில் ஒலிம்பிக் போட்டி!

Admin

இலங்கையில் அவசர நிலை பிரகடனம் : காரணம் என்ன?

Admin

மலேரியாவுக்கு தடுப்பூசி… 30 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி!.

தடுப்பூசி போடலைன்னா வேலையை விட்டு போங்க…அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை

Admin

அமெரிக்காவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி!

Admin

காட்டில் உறங்கும் யானைக் கூட்டம்… சேட்டை செய்யும் குட்டி யானை… வைரலாகும் வீடியோ

Admin

பருவநிலை மாற்றத்தால் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து…!

Admin

தற்பாலின ஜோடிகளின் திருமணம் – வாடிகனின் உத்தரவை மீறும் ஜெர்மனி பாதிரியார்கள்!.

வடக்கு கூட்டணி படையினருடனான சண்டையில் 350 தாலிபான்கள் பலி?

Admin

Leave a Comment