தற்பாலின ஜோடிகளின் திருமணம் – வாடிகனின் உத்தரவை மீறும் ஜெர்மனி பாதிரியார்கள்!.

SHARE

போப்பாண்டவர் போப் பிரான்சிஸ் வெளியிட்ட உத்தரவுக்கு மாறாக ஜெர்மனி நாட்டின் கத்தோலிக பாதிரியார்கள் தற்பாலின ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் கத்தோலிக சமயத்திற்குள் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.

”தற்பாலின ஜோடிகளின் திருமணம் இயற்கைக்கு முரணானது என்பதாலும் உலகின் படைப்புக்கு எதிரானது என்பதாலும் தற்பாலின ஜோடிகளுக்கு கத்தோலிக பாதிரியார்கள் திருமணம் செய்து வைக்கக் கூடாது” – என போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவு ஐரோப்பிய நாடுகளில் கத்தோலிக சமயத்துக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. 

ஏனென்றால் ஏற்கனவே பத்துக்கும் அதிகமான ஐரோப்பிய நாடுகளில் தற்பாலின திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரங்கள் கொடுக்கப்பட்டுவிட்டன. கடந்த 2013ஆம் ஆண்டில் போப்பாண்டவராகப் பதவியேற்ற போப் பிரான்சிஸ் அப்போது தற்பாலின ஈர்ப்புள்ள மக்களுக்கு எதிராக எந்தக் கருத்தையும் கூறவில்லை. ‘ஒருவர் தற்பாலின ஈர்ப்பு உள்ளவராக இருந்தாலும் அவருக்கு இறை நம்பிக்கை இருக்கலாம், அவரை மதிப்பிட நான் யார்?’ – என்று அவர் அப்போது சொன்ன வாசகங்கள் இன்றும் ஐரோப்பாவில் மிகவும் பிரபலம்.

இந்நிலையில் சமீபத்தில் போப் பிரான்சிஸ் தனது நிலைப்பாட்டை மாற்றியது கத்தோலிகர்களுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. கத்தோலிகர்களில் ஒரு பகுதியினர் இதனால் கத்தோலிய சமயத்தில் இருந்து இளைஞர்கள் வெளியேற வாய்ப்பு உண்டு என்று அச்சமும் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக பாதிரியார்கள் தற்பாலின ஜோடிகளுக்கு தேவாலயங்களில் திருமணம் செய்து வைப்பதாக சர்வதேச செய்தி நிறுவனமான ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. இந்த திருமணங்கள் ஜெர்மனியில் பெரும் எண்ணிக்கையில் நடைபெற்று வருகின்றன.

இந்த செயலால் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பாதிரியார்கள் வாடிகனின் உத்தரவை வெளிப்படையாக மீறி உள்ளனர். இதனால் வாடிகன் தனது நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்யுமா? அல்லது கத்தோலிகர்களுக்குள் பிளவு ஏற்படுமா? – என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

– நமது நிருபர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

Admin

துப்பாக்கியால் சுட்டு தாலிபான்கள் வெற்றிக் கொண்டாட்டம்… 17 பேர் பலியான பரிதாபம்

Admin

அன்பென்றாலே அம்மா தாய்போல் ஆகிடுமா: இடிபாடுகளில் சிக்கிய குழந்தையினை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தாய் !

Admin

அமெரிக்காவில் அசத்தி வரும் தமிழர்… ராஜகோபால் ஈச்சம்பாடி எனும் நான்

Admin

பெண்கள் நடத்திய போராட்டம் குறித்து செய்தி வெளியிட்ட 2 பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்

Admin

ஆப்கனை விட்டு வெளியேறும் மக்கள் – விமானத்தில் தொங்கிக்கொண்டு செல்லும் அவலம்

Admin

உலக அரசியல் தலைவர்கள் செல்போன்கள் ஹேக்.. இந்தியால யாரெல்லாம்?வெளியான அதிர்ச்சி தகவல்…!

Admin

கல்லாக மாறும் பெண் குழந்தை … அபூர்வ நோயால் போராடும் அவலம்…

Admin

வீட்டிலிருந்து வெளிவர தடுப்பூசி செலுத்திய ஆதாரம் தேவை: சவுதி அரசு

இன்று நெல்சன் மண்டேலா தினம்!. மண்டேலா குறித்து அறியப்படாத 20 தகவல்கள்…

கொரோனாவை கையாளத் தவறிய ஜப்பான் பிரதமர் பதவி விலக முடிவு..!

Admin

இஸ்ரேலில் முடிவுக்கு வந்தது 12 வருட நெதன்யாகு ஆட்சி ..புதிய பிரதமராக பதவியேற்றார் நப்தாலி பென்னட்!

Admin

Leave a Comment